பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 35 &

போக்குதற் கரிய இக்காதல் நோய் என் உயிரையே பற்றிவாட்டுகிறது. உயிர்கூடப் போய்விடும் போலும் இந்த நோயைத் தீர்க்கும் மருந்தாக அமைவது அவள் காதலே அவளே இந்த நோயைத் தீர்க்கமுடியும். ஒளி பொருந்திய வளைகளைத் தன் முன்கையிலே வரிசையாக அணிந்த அவள் மனம் இரங்காளாயின் யான் உயிர் வாழ முடியாது. உலகத்திலே மக்களுக்கு வரும் பலவகைப் பிணிகளுக்கும் மருந்துகளாக அமைவது வெவ்வேறு பொருள்களே. ஆனால் இந்தக் காதல் நோய் ஒன்றனுக்கு மட்டும் அதுவே மருந்து. வேறு மருந்து இல்லை. அவளது தண்ணிய மதிமுகத்தைக் காணுதல் கூடுமாயின் அதுவே இப்போது மருந்தாக அமைய முடியும். அந்த இனிய தண்ணிய மதிமுகத்தைக் கூட இப்போது காண முடியாதாயின் வீணாக யான் வேறு, நோயினைத் தீர்க்கும் மருந்தே இல்லாமல் இறக்க நேரிடும். அவன்தன் இன்முகமுங் காட்டாளாயின் யான் என்ன செய்வேன்? என்று அவ்விளைஞன் தோழியிடம் தன் குறையைத் கூறி அதைத் தணிக்கும்படிவேண்டுகிறான். இதில் காதல் மனோதத்துவமே பரந்து நின்று விளங்குகிறது.

"ஆரஞர் எவ்வம் உயிர் வாங்கும்

மற்று.இந் நோய் தீரும் மருந் தருள் வாய்

ஒண்தொடி நின்முகங்காணும் மருந்தினேன் -

என்னுமால் நின் முகத்தான் பெறின் அல்லது கொன் னே மருந்து

பிறிது யாதும் இல்லேன் திருந் திழாய் - -

என்செய்வாங் கொல்? இனி நாம்" -

(குறிஞ்சிக்கலி) (ஆரஞர்போக்கரிய துன்பம்-நோய், எவ்வம்-வாட்டத்தால், ஒன்தொடி-வளையலணிந்த பெண்ணே என்னும் - என்று கூறும், ஆல்-ஆசை, கொன்னே-வீணாக, திருந்திழாய்-அணிகளை அணிந்தவளே) - - -