பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

•o 36 கலித்தொகை பரிபாடல் காட்சிகள்

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை "தன்நோய்க்குத் தானே மருந்து"

என்று இந்தக் காதல் மனோபாவத்தைத் திருவள்ளுவரும் கண்டு கூறியுள்ளார். -

காதல் என்பது உள்ளமும் உயிரும் கொள்ளும் தெய்வீக தொடர்பு என்பதை இக்காட்சி விளக்குகிறது.

தோழியின் உதவி

தலைமகன் தோழியிடம் வேண்டிக் கொண்டது வீண்போகவில்லை. தோழி தலைவியிடம் அவனது நோயை எடுத்துக் கூறிக் குறை தணிக்கும்படி வேண்டுகிறாள். "தலைவி" அதனை மறுக்க முடியாத வகையில் தன் சொற்களை நிறுத்துக் கூறுகிறாள் தோழி. "நீயும் அவனைக் கண்டு கண்டு தலையைக் குனிகிறாய், அவன் குறையை யான் உன்னிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போது நாணத்தால் தரையை நோக்கிக் கொண்டே கால் விரலால் மண்ணைக் கிளைக்கிறாய். எனவே உனக்கும் அவன்மேல் ஏதோ ஒரு பற்று உண்டு என்பதை நீ என்னிடம் மறைக்க முடியாது என்று தோழி கூறுவாளானால், பின் தலைமகள் அவள் வேண்டுகோளை எவ்வாறு மறுக்க முடியும்? தலைவனுக்குத் தோழி தான் உதவி செய்யும் முகமாகத் தலைவியிடம் கூறியவை.

":பூக்களை முடித்திருப்பதனால் பொலிவு பெற்ற கூந்தலையுடைய தலைவி! நான் நின்னை அழைத்து அழைத்துத் தலைவனுழைச் சென்று வருக, என்று அனுப்பியது போல நீ அவனிடத்துச் செல்வாயாக. அங்ங்னம் சென்று இவ்விடமே நினக்கு இருப்பிடமாகக் கருதி இருந்தாயோ என்று என்னைத் தேடி அங்கே சென்றவள்போலக் கூறி அவ்விடத்திலுள்ள குறிப்பிட்ட இடத்திற்கு நீ செல். செல்லுங்காற் றொய்யிற் குழம்பு கொணர்வாள் போலச் செல். அப்படி நீசெல்லும் பொழுது அவன்நோய் தீர்க்கும் மருந்து நீயே ஆகையால் அவன் நினது காலில் வீழ்ந்து நின்னை வேண்டுவான். ஆராய்ந்து பார்க்கும்போது நான் இதனைக் கூறும்போதே நீயும் நாணத்தால் தல்ை குனிந்து நிலத்தைக் கீறுகிறாய்! இங்ங்னம் என் முன்னால்