பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 &

சுழலும் மத்து

முல்லைக்கவி

ஆயர் பாடியிற் பிறந்த இளங் கன்னி ஒருத்திக்கும் ஓரிளைஞனுக்கும் காதல் உண்டு. அக்கன்னியை நோக்கி அவ்விளைஞன் ஒரு முறை தன் மன நிலையைக் கூறுகிறான். தன் மன நிலைக்கு அவன் கூறுகின்ற உவமை காலத்திற்கும் இடத்திற்கும் குடிக்கும் பொருத்தமாக அமைகிறது. ஒரு முறை அவ்விளைஞன் விருப்பத்தைப் புறக்கணித்ததோடல்லாமல் அவனை இழித்தும் கூறிவிட்டாள் அவள். பொறாது நெஞ்சு வெதும்பிய இளைஞன் பேசுகின்றான் :

"மெல்லிய இயல்பினையுடைய ஆயர் சாதியிற் பிறந்த பெண்ணே தயிர் கடையும்போது சுழன்று சுழன்று கடையும் மத்தைச் சுற்றிய கயிற்றினைப் போல் என்னுடைய நெஞ்சு நின்னுடைய அழகைச் சூழ்ந்து கொண்டு சுழன்று திரிகிறது. நீ கூறிய கொடுஞ்சொற்களாலே என் நெஞ்சு அஞ்சுகிறது. அவ்வச்சத்தினாலே நின்னிடத்திலிருந்து மீண்டு தன் நிலை எய்தமுடியாது அளப்பரிய துன்பத்தைத் திரும்பவும் பெற்று என்னிடத்திலிருந்து சென்று சென்று தடுமாறி வருகிறது. முதல் முதலாக ஈன்ற பகவானது வீட்டிலிருந்து மிக்க தொலைவில் ஒருதொழுவினுள் கட்டி வைத்த, தன் பசுங்கன்றை நினைத்துப் புல்மேயவும் போகாது. சுற்றிச்சுற்றித் திரியும்அத்தாய்ப் பசுவைப் போல நின்னைக் கண்டு என் நெஞ்சு நாள்தோறும் நடுநடுங்கி அல்லலுறுகிறது.

"அச்சாத்தால் மாறி

அசைவினாற் போதந்து நிச்சந் தடுமாறும்

மெல்லியல் ஆய்மகள் மத்தம் பிணித்த

கயிறுபோல் நின்நலம் சுற்றிச்சுழலும்

என் நெஞ்சு விடிந்த பொழுதினும்