பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 43 & யாரோடும் சொல்லியாள் அன்றே

வனப்பு" திருந்தாச் சுமட்டினள் ஏனைத் தோள்வீசி வரிக்குழை வட்டி

வழி இ அரிக்குழை ஆடல் தகையள்"

(கலித்தொகை : முல்லை)

(மதை இனள் - இளமைச் செருக்கினள், கெளவை -ஆரவாரம், கண் டை-பார்த்தாய், சொல்லியாள் சொல்லத்தகுந்தவள், வனப்பு - அழகின்ஈட்டம், சுமட்டு-சுமை, வரிக்குழைவட்டி - வட்டில், குழை-காதணி, தகையள் - தன்மையள்)

இளம் ஆணுள்ளம் பெண்மையின்பால் ஈடுபட்டு ஊறுகின்ற போது எய்துகின்ற மனோபோதையை உணர்ச்சி மிகுதியை இவ்வாசிரியர் சுவைபட எடுத்துக்காட்டுகிறார். அதனோடு அவ்விளைஞனையே தான் கண்டு கவரப்பட்ட மோர்விற்கும் மெல்லியலின் வனப்பை ஒரு காட்சியாகச் சொல்லால் வரைந்து காட்டும்படிசெய்கிறார். தெருவில் கைவீசி நடக்கும் மோர் சுமந்த கன்னிப் பெண் நம் கண் முன்னால் உருவாக்கப்படுகிறாள் அவனுடைய வருணைனைச் சொற்களால்,

வெற்றிச் செருக்கு

வெற்றியென்பதைப் பொறுத்தவரையில் - அது எந்தத் துறையிலாயினும் சரி, செருக்கைத்தான் செய்கிறது. வெற்றியின் சுவையே செருக்குருவத்தில்தான் வெளிப்படுகிறது. நன்றாக ஆராய்ந்து சொல்லப் போனால் வெற்றிக்குரிய மெய்ப்பாடுகளே செருக்கு இறுமாப்பு, ஏக்கழுத்தம், பீடு, இவைகள்தாம். காதல்துறை மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன? இல்லைதானே. ஒரு பெண்ணை ம்னம்புரிய விரும்பும் இளைஞர்களுக்கெல்லாம் அப்பெண்ணின் தந்தை "ஏறுதழுவுதல்" என்ற ஒரு தேர்வை வைக்கிறார். தம் மகளுக்குத் தக்க கட்டும் பொலிவும்