பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 45 -o

(தொழிலி - தொழில் வல்ல தோழி, ஒருக்கு-ஒருங்கே, குரவை-கைகோத்தாடுங் கூத்து, குறு-நிறம், ஏது-காளை)

இதனுள் காதலில் வெற்றி பெற்ற இளைஞனுடைய வெற்றிச் செருக்கையும் தலைவியின் அதுபற்றிய இகழ்ச்சியையும் சோழன் நல்லுருத்திரன் சித்திரம் போல வரைந்து காட்டுகிறான்.

மருந்தில்லா நோய்

ஒரு முறை ஒரு இளைஞன் தன் கையாற்றொடுத்துக் கொடுத்த மாலையொன்றை விரும்பிப் பெற்று அணிந்து கொண்டாள் அவள்.ஆனால் இன்று அதுவே அவளுக்கு ஒரு சிறு பழியை ஏற்படுத்த ஆரம்பித்தது. அக்கம் பக்கத்தார், சுற்றத்தார், தோழி முதலாயினார், அது எங்கே கிடைத்த மாலை? என்று கேட்கத் தொடங்கினார்கள், அவள் சரியாகவே விட்ை தரவில்லை. அவர்கள் சந்தேகப்பட்டார்கள். தங்களுக்குள் ஏதோதோ மெல்ல மெல்லப் பேசினார்கள்.

அவள்தன் தோழியைக் கேட்டாள். இந்த வம்பை தவிர்ப்பது எப்படி? என்று. அப்பெண் ஆயர்குடியினள். தோழி ஒரு வழி சொன்னாள். "அவனும் ஒரு ஆயர் குடியிற் பிறந்தவனாக இருந்து நீயும் ஆயர் குடிமகளாயிருந்து, இருவரும் மெய்யாக விரும்பி யிருப்பீர்களாயின், உன் தாய் உன்னை வருத்தமாட்டாள், உங்கள் காதலுக்குக் கட்டாயம் வரவேற்புக் கிடைக்கும் என்றாள். தலைவிக்குத் தாய் அப்படி ஒருப்படுவாள் என்ற நம்பிக்கை இல்லை. "நினக்கு வைத்த நெஞ்சத்தைக் கடவுள் என் தாய்க்கு மாற்றி வைத்திருப்பானாயின் ஒருவேளை அவள் ஒப்புக்கொள்ளலாம்" என்றாள். "இன்னும் நீ உன் தாயை அப்படியா கருதுகிறாய்?" என்றார்கள் தோழி. நீ உன்னை இழந்த காதல் மிகுதியினால் ஆயர் மக்னை விரும்புதலோடு தாய்க்கும் அஞ்சுவாயாயின் நின் காதல் நோய்க்கு மருந்தில்லை. இரண்டிலொன்று துணிந்தாலொழிய நின்நோய் "மருந்தில்லா நோயே" என்றும் சொன்னாள் தோழி.

"ஆயர் மகனாயின்

ஆயமகள் நீயாயின் நின் வெய்யன் ஆயின்