பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 46 கலித்தொகை பரிபாடல் காட்சிகள்

அவன் வெய்யை நீயாயின் அன்னை நோதக் கதே

இல்லையின் நின்நெஞ்சம் என்னை நெஞ்சாகப்

பெறின் அன்னையோ? ஆயர் மகனையு காதலை

கைம்மிக ஞாயையுங் மஞ்சுதி ஆயின்

அரிதரோ நீயுற்ற நோய்க்கு மருந்து"

(கலித்தொகை : முல்லை)

(வெய்யன்-விரும்புபவன், வெய்யை-விரும்புவாய், நோதக்கது வருந்தத்தக்கது. என்ன - என் தாய் அன்னையோ-அத் தன்மையையோ? காதலை-காதல் உடையை, ஞாய்-தாய், அஞ்சுதி-அஞ்சுகின்றாய்)

இக்காட்சியுள் அறியாத இளமை அவன் கொடுத்த மலர் மாலையைச் சூடிக்கொள்வதையும், அதுவே காதலாக மாறுவதையும் காதலுக்குத் தாய் நெஞ்சம் ஒப்புமோ என்ற அச்சத்தையும் தோழியின் ஆறுதலையும் காண்கிறோம். காதல் நோய்க்குக் காதல்தான் மருந்து. காதல் வெற்றி பெறமுடிவில்லை என்றால் அக்காதல் நோயும் "மருந்தில்லா நோய்" ஆகவே அமைந்துவிட்டது.

களவு வெளிப்பட்டது

அந்த இளங்குமரிப்பெண், தன் இனத்தைச் சேர்ந்த ஆட்டிடையன் ஒருவன் கொடுத்த முல்லை மாலையைச் சூட்டிக்கொண்டு வீட்டிற்கு வருகிறாள். வீட்டில் தாய் தந்தையருக்கு நடுவில் இருக்கும் போது அந்த மாலை தலையிலி ருந்து அவிழ்ந்து கீழே விழந்துவிடுகிறது, தாய் தந்தையர் தீயை மிதத்தாற் போலத் திடுக்கிட்டு அவளைப் பார்க்கின்றனர். அவளுடைய களவு வெளிப்பட்டு விடுகிறது. இதைக் கண்ட பின்னும் தாய் என்ன? ஏது? என்று கேட்கவில்லை. மனதினுள் திடுக்கிட்டு நின்றாள். இதே நிகழ்ச்சியை அந்தப் பெண் தன்