பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 49 *

நெய்தற் கலி

ஐந்தாவதாகிய நெய்தற்கலி நல்லந்துவனார் என்னும் புலவர் பெருந்தகையாற் பாடப்பெற்றது. தலைவி மாலைக்காலத்தில் ஏங்கி இரங்குதலைப் பற்றிப் பாடுவது. இத்திணைக்குரிய பொருள். சோகானுபவத்தைக் கூற்றுக்களாக வெளியிடும் நெய்தற்கலிப் பாடல்கள் சுவைக்கு இலக்கியமாக அமையும் சிறப்பு வாய்ந்தன. மாலைக்காலத்தின் சூழ்நிலைகளையும் தலைவியின் மனத்துன்பத்தையும் புலவர் புனைந்துரைக்கும் போது காட்சிகள் தத்ருபமாக அமைய முடிகின்றது.

உயிர் கொல்லும் பொழுது

"மாலைப்பொழுது வந்தது. கணவனோடு கூடிப் படுக்கைக்கு சென்றபின் துயில் பெற்ற மகளிர் கண்போலத் திரண்ட தண்டுகளையுடைய தாமரைமலர் கூம்பியது. தம்முடையபுகழைப் பிறர் கூறக் கேட்டு நாணித் தலைகுனியும் அறிஞர்களைப் போல மரங்கள் தலைசாய்ந்தன. சின்னஞ் சிறுகன்னிப்பெண் வாய்திறந்து சிரிப்பதுபோல் மல்லிகை முல்லைமுதலிய அரும்புகள் முறுக்க விழ்ந்தன. புல்லாங்குழலிலிருந்து வெளிவரும் கீத வெள்ளம்போல வண்டுகள் ஆரவாரம் செய்தன. இரைதேடச் சென்றிருந்த பறவைகளெல்லாம் குஞ்சுகளை நினைத்துத் திரும்ப தொடங்கின. பசுக்கள் தத்தம் கன்றுகளைக் காணும் நோக்கத்தோடு கொட்டங்களுக்கு வந்தன. காட்டு விலங்குளெல்லாம் இருப்பிடங்களுக்குச் சென்று துடங்கின. அந்தணாளர்கள் தாங்கள் செய்தற்குரிய மாலைக் கடன்களைச் செய்தனர். பெண்கள் சிவந்த சுடர்நாக்குகளால் ஒளிபரப்பும் விளக்குகளை ஏற்றினர். இப்படிப்பட்ட மாலைப்போது பெண்களின் உடலிற் பொதித்த உயிரைக் கொல்லும் பொழுது என்பதை அறியாது இதற்கு மாலைக் காலம் என்று பெயரிட்டிருக்கிறார்கள். உயிர் கொல்லும் பொழுதிற்கா மாலையென்று பெயர்? அப்படிப் பெயர் வைத்தவர்கள் அறிவுமயங்கிப் பெயர் வைத்துவிட்டார்களோ தலைவனின்றித் தனியே இரங்குகின்ற, தலைவியின் மனம் அவல மிகுதியினால் மாலையை உயிர்கொல்லும் பொழுதாக ஒதுகிறது. -

5.恶打.4