பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 52 கலித்தொகை பரிபாடல் காட்சிகள்

"இடன் இன் றலைத்தரும்

இன்னாசெய் மாலை துனிகொள் துயர்தீரக்

காதலர் துணைதர மெல்லியான் பருவத்து

மேல் நின்ற கடும் பகை ஒல்லென நீக்கி

ஒருவாது காத்தோம்பு நல்லிறை தோன்றக்

கெட்டாங்கு இல்லாகின்றால்

இருளாகத் தொளித்தே

- (கவித்தொகை , நெய்தல்)

(இடன் இடம், அலைத் தரும்-துன்பமுறுத்துகின்ற, இன்னா-கொடியவைகள், துனிகொள்-வருத்தம் மிக்க, துணைதர-வேகமாகவந்து சேர, மெல்லியான் பருவத்து, இளைய பருவத்தினன். ஒல்லென - விரைவாக, ஒருவாது-நீக்கமின்றி, காத்தோம்பல்-பாதுகாத்தல், நல்லிறை-நல்ல அரசன், இருளகத்து -இருளினுள்ளே, ஒளித்த-மறைத்து, இல்லாகின்று-இல்லாது போகின்றது)

இந்தப்பாட்டிற் கூறப்படும் உவமையிலிருந்து மிகப் பெரிதொரு அரசியல் தத்துவம் வெளிப்படுகிறது. எதுவரை அரசன் வலிமையற்றவனாக இருக்கிறானோ அதுவரை அவன் பகைகள் அவனை அழித்தொழித்து விடுவதற்கு நேரம் பார்த்துக்கொண்டே இருக்கின்றன. எப்பொழுது அவன் தன் தன்னிகரற்ற வலிமையுடையவனாக ஆகின்றானோ, அப்போதே தன் பகைகளை அவனால் அழிக்கமுடிகிறது. என்கின்ற தத்துவங்களே அவை. தலைவன் வருகின்றவரை அவளை வாட்டி வருத்திக் கொண்டிருந்த மாலைக் காலமாகிய பகை, அவன் விரைவாக வந்தவுட்ன் அழிந்து போகிறது என்பதை விளக்குவதற்குத்தான் இத்தகைய கருத்துப் பொதித்த உவமையைக் கூறுகின்றாள் தோழியிடம் தலைவி.