பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 53 & நல்லகாலம் பிறக்கட்டும்

தலைவிக்கு நல்லகாலம் பிறக்க வேண்டுமென்று தோழி தலைவனை வெளிப்படையாக வந்து அவளைத் திருமணம் செய்துகொள்ள வேண்டுகின்றாள். எப்படியாவது தலைவிக்கு நல்லகாலம் பிறக்கவேண்டுமென்பதே தோழியின் குறிக்கோள். நெய்தல் திணைக்குரிய நெய்தல் நிலமென்பது கடலும் கடல் சார்ந்த இடமுமாகும். கடற்பகுதியில் வாழ்கின்றவளுக்கு உவமை சொல்லக் கடற்கரை நிகழ்ச்சி ஒன்று நினைவில் வந்து அமைகின்றது. வீசி ஆரவாரித்து வருகின்ற கடலின் பேரலைகளில் கடலிலுள்ள மீன்கள் கரையில் தூக்கி எறியப் பெறுகின்றன.

ஆனால் தூக்கி எறியப்பெற்ற மீன்கள் அடுத்த கணமே வேகமாக வருகின்ற மற்றோலரையினால் மீண்டும் கடலுக்குள்ளே கொண்டு செல்லப் படுகின்றன. இந்த விந்தைமிக்க அழகிய நிகழ்ச்சியைப்போல நீ இன்பம் நல்குங் காலத்து மகிழ்ந்திருந்த இவள், தற்போது பருவம் வந்ததெனப் பெற்றோர் வீட்டைவிட்டு வெளியேறாமற் பாதுகாத்தலினால் அவ்வின்பங் குறையப்பெற்று வருந்துகின்றனள். அவ்வருத்தம் போயொழியும் படியாக நீ தினது குதிரைகள் பூட்டிய திண்மையான தேரிலேறி வெளிப்டையாக வந்து பலரறிய இவளை மணந்துகொள்க, அங்ங்ணம் மணந்து கொள்வாய் ஆயின் அப்போதே தலைவிக்கு நல்லகாலம் பிறக்கும். பிறக்கின்ற அந்த நல்லகாலமும் விரைவிற் பிறக்கட்டும் என்று தோழி தலைவனை மணந்து கொள்ளும்படி வற்புறுத்துகின்றாள்.

"எறிதிரை தந்திட

இழிந்த மீன் நின்றுறை மறிதிரை வருந்தாமல் கொண்டா ங்கு நெறிதாழ்ந்து சாயினள்

வருந்தியாள் இடும்பை பாய்பரிக் கடுந்திண்டேர்

களையினோ விடனே" (எறிதிரை-எறியப்படும் அலைகள், இழிந்த-கரையில் வந்து வீழ்ந்த, மறிதிரை-மீண்டும் வந்தஅலை, சாயினள்-துன்புற்றனள், இடும்பை - துன்பம், பாய்பரி - பாயுங்குதிரைகள்)

(கலித்தொகை : நெய்தல்)