பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

•o 54 கலித்தொகை பரிபாடல் காட்சிகள்

இதனுள் தலைவிக்கு நல்லகாலம் பிறக்கவேண்டுமென்று தோழி தலைவனை வற்புறுத்தியுள்ள விளைவுக் குறிப்பு மாறு பாடற்ற முறையில் வெளிப்பட்டு விளங்குகின்றது. சூழ்நிலையின்றி அனுபவம் நினைவு எண்ணம் முதலிய யாவும் வேறெவற்றொடும் தொடர்புகொண்டு வெளிப்படுவதில்லை என்ற சித்தாந்தத்தை இங்கே தோழி மெய்ப்பிக்கின்றாள். தான் நெய்தல் நிலத்தினாள், அந்நிலத்து நிகழ்ச்சிகளில் தோய்ந்த அனுபவமும் பயிற்சியும் உடையவள் என்பதனை தோழி தான் கூறும் உவமையால் நிலைநாட்டுவதோடு தலைவிக்கு நல்லகாலம் பிறக்கவேண்டும் என்னும் குறிப்பையும் கூறுகின்றாள்.

கனவு தந்த காதலர்

அவள்தன் காதலனைக் கனவிற் கண்டாள். கனவு பலிக்கும் என்பது அவள் காதல் நெஞ்சத்தின் நம்பிக்கை. நம்பிக்கைதானே என்றும் நைந்த உள்ளத்தில் மகிழ்ச்சி பூக்க வைக்கிறது. பேசுகிறாள் அவள் : என் காதலனை நாள் நேற்றிரவு கனவிற் கண்டேன். தோழி! அது கனவாகமட்டும் இருக்குமென்று நான் நினைக்கவில்லை. நான் கண்ணாரக்கண்டு மகிழக் கனவிற் காட்சி கொடுத்த அழகிய கானல்களையுடைய தலைவன் நனவிலும் வருவது உறுதி என்று இடைவிடாது நினைந்து அவ்வரவு என்னும் எல்லைக்கோட்டில் அந்த ஆசை பற்றுக் கோடாக எனது பெறுதற்கு அரிய உயிர் நிற்கின்றது என்று தன்னிடத்துத் தோன்றிய அவலமென்னும் சுவை வெளிப்படும் படியான தோய்ந்த உணர்வு வெளிப்படத்தக்க சொற்களால் பேசினார் தலைவி.

"கனவினாற் கண்டேன்

தோழி காண்டகக் கனவின் வந்த

கானலஞ் சேர்ப்பன் நனவின் வருதலும் உண்டு என அவன் வரை நின்றதென்

அரும் பெறல் உயிரே"

(கலித்தொகை : நெய்தல்)