பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

る・58 கலித்தொகை பரிபாடல் காட்சிகள்

" திருமாற் கிரு நான்கு செவ்வேட்கு முப்பத் தொரு பாட்டுக் காடுகாட் கொன்று - மருவினிய வையை யிரு பத்தாறு மாமதுரை நான் கென்ப செய்ய பரிபாடற் றிறம்"

ஆனால் இப்பொழுது நமக்குக் கிடைக்கும் இந்த நூற் பாடல்கள் இருபத்திரண்டே ஆகும். இவ்விருபத்திரண்டு தவிரப் பழைய உரைகளில் மேற்கோளாக வந்த இரண்டு முழுப் பாடல்களும், சில பாடலின் பகுதிகளும் கிடைக்கின்றன. இந்த அளவிலாவது இந்நூலை நாமறியச் செய்த பெருமை கலாநிதி ஐயரவர்களையே சாரும.

பாடிய ஆசிரியர்கள்

இந்நூலின் பாடல்களைப் பாடிய ஆசிரியர்கள், ஆசிரியன் நல்லந்துவனார், இளம் பெருவழுதியார், கடுவன் இளவேயினனார், கடும்பிள்ளைப் பூதனார், கீரந்தையார், குன்றம்பூதனார், கேசவனார், நப்பண்ணனார், நல்லச்சுதனார், நல்லழுசியார், நல்லெழுளிையார், நல்வழுதியார், மையோடக் கோவனார் முதவி யோர் ஆவர். இவர்கள் தற்போது கிடைக்கும் பாடல்களின் குறிக்கப்பெற்றிருக்கின்றன்ர் இப்போது கிடைக்காத பாடல்களின் ஆசிரியர்கள் பெயர் நமக்குத்தெரிய வழியில்லை. இனி ஒவ்வொரு பாடலிற்கும் பண் அமைத்துக்கொடுத்த இசையாசிரியர்கள் பெயரும் பாடல்களின் கீழே குறிக்கப் பெற்றிருக்கிறது நூற்பாடலுக்கு ஆசிரியர்களான கேசவனார், நல்லச்சுதனார் ஆகிய இருவரும் சிறந்த இசையாசிரியர்களாகவும் இருந்திருக்கிறார்கள் என்பது முறையே இந்நூலின் பன்னிரண்டாம் பாடலாலும், பதினாறு, பதினேழு, பதினெட்டு, இருபது ஆகிய பாடல்களாலும் தெரிய வருகிறது.

இது தவிரக் கண்ணகனார், கண்ணன் நாகனார், நந்நாகனார், நல்நாகனார், நாகனார், பித்தாமாத்தர், பெட்டனாகர், மருத்துவன் நல்லச்சுதனார் ஆகிய இசைப் பேராசிரியர்களும் இந்நூற் பாடல்களுக்கு பண்ணமைத்துள்ளார்கள். இனிப் பாலையாழ்ப்பண், நேர்திறப்பண், காந்தாரப்பண் என்ற மூன்று பண்களே இப்போது கிடைக்கும் இந்நூற் பாடல்களுக்கு