பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 59 & அமைந்த பண்வகைகள். இவற்றுள்முதற் பாடலுக்குப் பண், பண்ணாசிரியர், பாட்டாசிரியர். இவர்களுள் ஒருவர் பெயருமே தெரியவில்லை. எனவே முதற்பாடல் தவிர்த்துப் பார்த்தால், இரண்டாம் பாடலில்லிருந்து பன்னிரண்டாம் பாடல்வரைக்கும் "பாலை யாழ்ப் பண்ணைச் சேர்ந்த பாடல்கள் பதின்மூன்றிவி ருந்து பதினேழுவரைக்கும் உள்ள பாடல்கள் நேர் திறப் பண்ணைச் சார்ந்தவை. பதினேழாம் பாடலிலிருந்து இருபத்தொன்றாம் பாடல் வரை காந்தாரப் பண்ணைச் சார்ந்தவை. இருபத்திரண்டாம் பாடலுக்கும் உரையிற்கிடைத்த ஏனைய இருபாடல்களுக்கும், பண் முதலியன கிடைக்கவில்லை. நேர்திறப்பண்ணை இந்நூல் "பண்ணோ திறம்" என்று குறிக்கிறது. "பண்ணேர்திறம்" என்றிருக்க வேண்டும்.

ஒருவேளை "பண்நோதிறம்" என்று பிரித்துச் சோக பாவத்தை வெளிப்படுத்தும் பண்ணாக இருக்கலாமோ என்றும் ஐயுற நேரிடுகின்றது. இப்படிப் பெரும்பாலும் ஒரே பண்வகையிற்பயின்று வரும் பாடல்களுக்கு இசை வகுப்பது சிறப்பன்று ஆதலால், இப்பாடலெழுந்தகாலத்து உரிய பண்களில் இவற்றை இசையோடு கற்பித்து வந்த ஆசிரியர்களும் இவர்களே என்று கூறுவது இன்னும் பொருத்தமாக அமையும் இறையனார் களவியலுரை கர்ண பாரம்பரியம் பெற்று நடந்ததுபோல் இந்நூல் கர்ணபாரம்பரியம் பெற்று நடக்கமுன்னின்றவர்கள் இவ்வாசிரியர்கள் என்பது சாலப் பொருந்தும்.

இதன் கால வரையறை

இதன் தோற்றக் காலத்தைப் பற்றிய இருவேறுபட்ட கருத்துக்கள் உண்டு. இது முதற் சங்ககாலத்துத் தோன்றியிருக்கவேண்டும் என்பது ஒரு சிலர் கருத்து. இடைச்சங்ககாலத்துத் தொல்காப்பியம் தோன்றிய பின்னர்அதிலிருந்து இலக்கணம் பெற்று எழுந்தது என்பது பெரும்பான்மையோர் கருத்து. முதற்சங்க வரலாறு கூறும் ஆசிரியப்பா ஒன்றனுள் பரிபாடலைக் குறிப்பிடுவதே முற் கூற்றினர்க்குச் சான்றாக அமையும்.

ஆனால், முதற்சங்கம் தென் மதுரைக் கண்ணதாகலானும் வையையாறு ஆண்டின்மையானும் அவர்கூற்றுச் சற்றும்