பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& 62 கலித்தொகை பரிபாடல் காட்சிகள் 1. எங்கும் நிறைந்த எம்பெருமான்!

கடவுள் உலகின் ஐம்பெரு பூதங்கள் எல்லாம் தாமேயாகி விளங்குகின்றார். அவருடைய ஒவ்வொரு பண்புகளும் ஐம்பெரும் பூதங்களின் இயக்கத்தில் எல்லாருங் காண வெளிப்படுகின்றன.

"Thou the light of sun -

Thou the soft and cool of moon Thou the fall of rain

Thou the Smell of all flowers in the world

Thou the colour of the clouds and air

Thou the king and kingdom of the world"

என்று கடவுளை எங்குமாகக் கண்டு இன்புற்றான் பிற்காலத்து ஆங்கிலக் கவியொருவன். இதையே பன்னூறு ஆண்டுகட்கு முன்னர் எடுத்துக்காட்டியது பரிபாடல். கதிரவனிற் காணும் விளக்கமும் உணரும் வெம்மையும், சந்திரனிற் காணும் சாயலும் உணருங் குளிர்ச்சியும், வானத்தில் பெய்யும் மழையும் மழை பெய்யும் வள்ளன்மையும் உலகத்தைத் தாங்குதலும், உலகத்தை ஆளுதலும், உலகத்துப் பூக்களின் ஒளியும் மணமும், நீரின் அகலமும், நீரின் பரந்த நீலப் பரப்பின் தோற்றமும் வானத்தின் ஒலியும் வானமுகில்களின் வண்ண உருவமும். காற்றின் வரவும் போக்கும். ஆகிய இவை யாவும் எங்கும் நிறைந்து விளங்கும் எம்பெருமானின் இயக்கங்களே! ஆகாயம் சத்த குணமுடையது” என்பது தருக்க நூல் முடிவு (The airis sound-field) என்பர் மேல்புல துண்ணுாற் கலைஞரும்

“நின் வெம்மையும்

விளக்கமும் ஞாயிற்றுள நின் தண்மையும்

சாயலும் திங்களுள நின் சுரத்தலும்

வண்மையும் மாரியுள நின் புரத்தலும்

நோன்மையும் ஞாலத்துள நின் நாற்றமும்