பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

நா. பார்த்தசாரதி ஒண்மையும் பூவினுள நின் தோற்றமும்

அகலமும் நீரினுள நின் உருவமும்

ஒலியும் ஆகாயத்துள நின் வருதலும்

ஒடுக்கமு மருத்தினுள”

(பரிபாடல்)

ஞாயிறு - கதிரவன், சாயல் - மென்மை, திங்கள் - சந்திரன், மாரி - மழை, புரத்தல் ஆட்சி, நோன்மை - சுமை, ஞாலம் - உலகம் - நாற்றம் - மணம், ஒண்மை - ஒளி, ஒடுக்கம் - போக்கு மருந்து - காற்று, வருதல் - தோன்றுதல்

கடுவன் இளவெயினானார் என்ற இதன் ஆசிரியர் கடவுட் தத்துவத்தை எம்மதத்தினரும் சம்மதமென்று ஒப்பும்படியாக உரைக்கின்றார். கடவுளே உலகின் மூல அணுவாய் முழுப்புேருலகின் இடமுழுதும் அணுவளவு இடைவெளியுமின்றி ஒன்றிச் செறிந்த மூலப் பரம் பொருள் என்பதை ஆசிரியர் நன்றாக விளக்குகிறார். காலை, மாலை, கடவுளை வழிபடும் பிரார்த்தனைப் பாடலாக கொள்ளத் தக்கது.

2. நட்பும் பகையுமற்ற நாதன்!

இறைவனுடைய நோக்கு பொதுநோக்கு ஒரு தாய் தன் மக்களை எந்த ஒரு சமநோக்கோடு பார்க்கின்றாளோ அதே சமநோக்குத்தான் மக்களிடம் இறைவனுக்கும் இருக்கிறது. பெருங்குற்றம் உண்டாகும்படி வருத்துகின்ற சினமும் கடுமையும், கொடுமையும், நேர்மையும், வெம்மையும், தண்மையும், ஆகிய இப்பண்புகள் இருக்கவேண்டிய இடத்து இவையுடைய வனாகவும் இருக்கக்கூடாத இடத்து இவை இல்லாதவனாகவும் விளக்குகின்றான் இறைவன். தனக்குப் பகையான உயிரிலும் தனக்குப் பகையில்லாத உயிரிலும் எல்லா உயிரிலும் இன்பம் செய்யக்கூடியவன். .. - -