பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& 64 கலித்தொகை பரிபாடல் காட்சிகள்

தன்னை விரும்பும் உயிர்க்கு இன்பமும் விரும்பாத உயிர்க்குத் துன்பமுமாகச் செய்பவனல்ல இறைவன். விரும்புவர், விரும்பாதவர், நட்பு, பகை போற்றுபவர், போற்றாதவர், என்னும் இவைகள் அவனுக்கு இல்லையென்பதை நன்றாக உணரும் அறிஞர்கள் ஆராய்ந்தால் வேற்றுமை சிறிதும் இன்மை வெளிப்படும், நட்பும் பகையுமற்ற நாதனே இறைவன் என்பது இறை ஞான முனருந் தகுதி வாய்ந்தவர்களுக்கு வெளிப்படையான செய்தியாம்! இறைவன் அன்பர் மனத்திற்கொண்ட உருவே தன்னுருவாக உடையவன். அவன் தனக்கென வேறுருவம் ஏதுமில்லாதவன். பேசுவோர். பேசும் வடிவுகளிலெல்லாம் பெரு விருப்போடு அமர்ந்து தன் அருளொளி மிகுத்து இருள்கடிவன் எம்பெருமான், காலையும் மாலையும்அவனைக் கரங் கூப்பி வணங்கி வணங்கி ஒள்பெற்றுத் தனது உறுதிப் பொருளைத் தேடி நடந்து கொண்டிருக்கின்றது உயிர்க்குலம். உயிர்குலம் தடுமாறும்போது கோடானுகோடி ஊன்று கோல்களாக வந்திருந்து திருவருள் உதவுகிறது உயிர்க்குலம் வாழவேண்டுமென்றுதான் அயர்வின்றி ஊழிவரை விழித்திருக்கிறது அருள். கொட்டும் மழையிலும் குமுறும் இடியிலும்,வெட்டும் மின்னிலும், வீசும் புயலிலும்; எரியும் தீயிலும். எம்பெருமான் மறைந்து நின்று இயக்குகின்றான்! அவனால் ஆகாததில்லை!! ஆக வேண்டியதை அவன் ஆக்குகிறான் - அழிக்க வேண்டியதை அவன் அழிக்கிறான்!!! நட்பால் ஆக்கவோ - பகையால், அழிக்கவோ நாதன் எண்ணுவதும் இல்லை?

"கடுநவை யணங்கும்.

கடுப்பு நல்கலும் கொடும்ையுஞ் செம்மையும்

வெண்மையுந் தண்மையும். உள்வரி யுடையை

இல்வழி இலையே போற்றார்'உயிரினும்

போற்றுந ருயிரினும் மாற்றே மாற்றல்