பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலித்தொகை பரிபாடல் காட்சிகள்

இலக்கியம்
  கலித்தொகை என்னும் நூலிற் காணப்படும் நயமான சில பகுதிகளை சுருங்கிய அளவில் காட்சி போல விளக்குவதே இந்நூலின் நோக்கம்.
  சங்க இலக்கியங்கள் இரண்டு பொருள்களைக் கருவாகக்கொண்டு இயங்குவன. ஒன்று காதல்; மற்றொன்று வீரம். காதலைப் பற்றிய பாடல்களை அகமென்றும், அறம்பொருள் முதலியவைகளோடு கூடிய வீரத்தைப் பற்றிய பாடல்களைப் புறமென்றும் பகுத்துள்ளனர். இவற்றுள் கலித்தொகை அகத்தைச் சார்ந்தது. காதலைப் பற்றிய செய்திகளை இலக்கியச் சுவைபட வகுத்துக் கூறுவது.
 முதற் பகுதியாகிய பாலைக்கலி காதலன் காதலியைப் பிரியுங்கால் நிகழும் செய்திகளைக் கூறுவது. இரண்டாவது பகுதியாக குறிஞ்சிக்கலி காதல் தோன்றுவதையும், ஒன்றுபடுவதையும் கூறுவது. மருதக்கவி காதலி காதலனோடு ஊடும் செய்திகளைக் கூறுவது. நான்காவதாகிய முல்லைக் கலி காதலியும் காதலனும் இல்லின் கண்ணிருந்து காதல் வாழ்வு நடத்தும் செய்திகளைக் கூறுவது.
  ஐந்தாவதாக நெய்தற்கலி தலைவன் பிரிவில் தலைவி இரங்கும் செய்திகளைக் கூறுவது. இவ்வைந்து திணைகளையும் கருப்பொருளாகக் கொண்டே பழந்தமிழர் அகவாழ்வு நிகழ்ந்திருக்கிறது. எந்த முறையில் கலித் தொகைக்காட்சிகளை காண வேண்டுமெனின், முதலிற் செய்யுளின் திரண்ட கருத்தை விமர்சித்துப் பின் செய்யுளைக் காண வேண்டும் அப்போதுதான். நன்றாக உணர்ந்து அனுபவிக்க முடியும்.
   முதலாவதாகிய பாலைக்கலி காதலன் பிரியுங்காற் காதலி பிரிவாற்றாது கூறுவனவற்றைப் பேசுவதென்று முன்பே