பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 69 & ஒன்றனில் போற்றிய

விசும்பு நீயே இரண்டின் உணரும் வளிமபும் நீயே மூன்றில் உணரும் தீயும். நீயே நான்கின் உணரும்

நீரும் நீயே ஐந்துடன் முற்றிய

நிலனும் நீயே அதனால்

நின் மருங் கின்று மூவே ழுலகும்

மூலமும் அறனும் முதன்மையின் இகந்த

காலமும் விசும்பும் காற்றொடு கனலும்".

(பரிபாடல்)

இதைப் பாடிய ஆசிரியர் நல்லழுநியார், கடவுள் - உலகு - இரண்டிற்குமுள்ள இயைபை விஞ்ஞான முறையில் விளக்கும் இவரது திறமை போற்றுதற்குரியது ஆகும். சுவை, ஒளி, ஒசை, ஊறு, நாற்றம் என்பன ஐம்புல உணர்வுகள் "சத்தப் பரிச ரத ருப கந்தம்" என்று இவற்றைக் கூறுவர். இவ்வைம்புல உணர்வுகளும் நிகழ்கின்ற இடங்களாக இருப்பவை, மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகள். இவ்வைம்புல உணர்வுகளுள் ஆகாயம் ஒசைப் புலனுக்கு மட்டும் உரியது. காற்று ஒசைக்கும் உணர்வுக்கும் உரியது. தீ, ஓசை, உணர்வு, ஒளி என்னும் மூன்றிற்கும் உரியது. நீர், ஒசை, உணர்வு, ஒளி, சுவை என்னும் நான்கிற்கும் உரியது. நிலம், சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐம்புலன்களுக்கும் உரிய பொருளாக அமைகின்றது. இவைகளுக்கெல்லாம் ஆதி மூலனாக விளங்குகிற அருட்பெருஞ்சோதியே இறைவன் என்பது விளக்கப்படுகிறது.