பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

哆

3.

நா. பார்த்தசாரதி 71 பன்மாண் அடுக்க இறைஞ்சினெம் வாழ்த்தினெம் முன்னும் முன்னும்யாஞ் செய்தவப் பயத்தால் இன்னும் இன்னும் எம் காமம், இதுவே"

(பரிபாடல்)

முகிழ்ப்பது - தோன்றுவது, கழலின் திருவடிகள், ஒருமைவினை - அன்பரிடம் அன்பு, அன்னையென - தாயென, நினை.இ - எண்ணி. பல்மாண் - பலவாகிய மாண்டி, காமம் - அடங்கா விருப்பம். எம்.காமம் - எமது விருப்பம். 7. ஊழி முதல்வன்

ஊழ்தல் என்றால் உதிர்தல், விரிதல், பிதிர்தல், மலர்தல் என்பன பொருள்கள். ஊழ் என்னும் முதனிலை செயப்படு பொருளுணர்த்தும். இதர விகுதி பெற்று உண்டாகியது ஊழி என்னும் சொல். யுகாந்தம் என வடமொழியாளர் கூறுவதையே நாம் தமிழில் ஊழி என்று குறிப்பிடுகிறோம். ஊழிக்குப் பிறகு மீண்டும் உலகு எங்ங்னம் தோன்றுகின்றது. ஊழியின் போது எவ்வாறு உலகு அழிகிறது? இறைவன் ஊழியை உண்டாக்குவதற்கும் முதல்வன், ஊழிக்குப் பிறகு உலகை உண்டாக்குவதற்கும் முதல்வன். ஆகவே அவன் ஒரு வகையிலல்ல இருவகையிலும் ஊழிமுதல்வனாகவே அமைகிறான். ஊழிக்குப் பிறகு உலகு தோன்றுவதை வடமொழி வேதங்கள் அழகாகக் கூறுகின்றன. இன்றைய ஆங்கில அறிவியல் நூல்கள் துருவித் துருவிக் காணும் உலகத் தோற்றத்தை (Birth of the world) வியக்கத்தக்க முறையில் வேதங்கள் கூறிச் செல்லுகின்றன. அதே கருத்தைப் பரிபாடல் நன்கு விளக்குகிறது. -

நன்னாகனார் என்ற புலவர் உலகத்தோற்றத்தை அறிவியல் முறையில் எடுத்துரைக்கின்றார். "காற்று முதலாகிய பூதங்களின் பரமானுக்கள் வளர்கின்ற ஒலிப்பண்பை இயல்பாகவுடைய உருவு தெரியாத வானமாகிய முதற் பூதத்தினது ஊழியும், அந்த வானத்திலிருந்து எல்லாப் பொருள்களையும் அமைதிப்படுத்தும் காற்றுத் தோன்றிய வரன்முறையான பல்ஊழியும், அந்தக் காற்றை மேலாகக் கொண்டு அதிலிருந்து சிவந்த நிறமுடைய தீயானது