பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3, 72 கலித்தொகை பரிபாடல் காட்சிகள்

தோன்றிய ஊழிகளும், அந்தத் தீயினின்றுந் தோன்றிப் பணியும் மழையும் பெய்து கொண்டிருந்த ஊழிகளும், அவைகட்குப் பின்னால் அந்நீரிலிருந்து தோன்றுவதால் மீண்டும் வெள்ளத்தினுட் கிடந்து பின் வெளிப்படுவதாகிய முற்றோன்றிய நான்கு பூதங்களுக்கு உள்ளீடாகியது நில உலகம்", ஊழியின் முதல் தோற்றம் கடலே. கடலிலிருந்து எழுவதே உலகு. ஊழி இறுதி, ஊழித்தோற்றம் இரண்டும் வெள்ளங்காரணம்ாகவே நிகழ்கின்றன. காற்று, வான், தீ, நீர் இந்நான்கு பூதங்களுக்கு இடையில் அந்தரமாகத் தொங்குவதே உலகம். அவ்வுலகின் ஊழிஇறுதிக்கும் சரி ஊழித்தோற்றத்திற்கும் சரி அவனே முதல்வனென்பது ஒருதலை.

"கருவளர் வானத்திசையில் தோன்றி

உருவறி வாரா ஒன்றன் ஊழியும் உந்து வளி கிளர்ந்த ஊழுழுழியும்

செந்திச் சுடரிய ஆழியும் பனியொடு தண்பெயல் தலைஇய ஆழியும் அவையிற்

றுன்முறை வெள்ளம் மூழ்கியார் தருபு மீண்டும் பீடுயர்பு ஈண்டிய வற்றிற்கும் உள்ளீடு ஆகிய இருநீலத் துரழி"

-பரிபாடல். கரு-பூதங்களின் மூலமான பரமானுக்கள் உருவறி வாரா-வடிவு புலப்படாதபடி ஊழி-தோற்றம் ஊழி-முடிவு வளி-காற்று பீடுயர்பு-பெருமை மேலெழு உள்ளிடு-இடையிடப்படுவது இருநிலத்துாழி-பெரிய நிலத்தின் தோற்றம் 8. அருள் நிழலில் அறம் "இறைவா தீயினுள் தீயாய்த் தோற்றுகிறாய், பூவினுள் புது மணமாய் கமழ்கிறாய். சுக்கான் கற்களுக்கு இடையில் இரத்தினச் சுரங்கமாக விளங்கி,வெளிப்படும் மணிகளாய் மாண்புறுகிறாய்.