பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 73 : சொற்களுக்குள் உண்மைச் சொற்களாக ஊன்றி நிற்கிறாய். அறத்தினுள் அன்பாக விளங்குகிறாய், மறத்தினுள் கொடுமை மிக்க வன்மையாகக் காட்சியளிக்கிறாய் வேதங்களுள் மறைந்த ஒளியாய் நின்றிலங்குகிறாய்! ஐம்பெரு பூதங்களுக்கும் முன்தோன்றிய முதல்வனாகின்றாய், வானத்துக் கதிரவனின் ஒளிவளமெல்லாம் நீயே யாகிறாய். தண்மதியின் இனிமையும் மென்மையும் குளிர்ச்சியும் நின்னுடையவை, எல்லாம் நீயேதான். எல்லாவற்றுள்ளும் இடையீடின்றிக் கலந்துள்ள உட்பொருளும் நீயே, ஆகையால் நினக்கு உறைதற்கு நேரமுமில்லை, உறைவிடமுமில்லை, மறதியுடையார் மறந்து மறந்து நினைவுகளைக் கெடுத்துக் கொள்வதுபோல், எல்லாப் பொருள்களிலும் நீயே இருக்கிறாய். ஆனால் இருப்பதாக எண்ணுகிறாயில்லை மறந்து போகிறாய். அது உன் மாயம்,

உலகின் முதலிலும், இடையிலும், இறுதியிலும் படைத்தல்,

அளித்தல், அழித்தல் என்னும் முப்பெருந்தொழிலால் ஏற்படும் வேற்றுமைகள் பற்றிப் பிறவாத பிறப்பினையுடையவன் இல்லை நீ நின்னைப் பிறப்பித்தோரும் இல்லை. நினக்குக் கொற்றக்குடை அருள். அக்குடையைத் தாங்கும் காம்பு அறம். அருள் நிழலில் அறத்தை வளர்க்கின்றாய். இருள் பர்வாது மூவேழுலகினையும் அறத்தால் அருள் நிழல் தரும் ஒரு குடைக்கீழ் ஆக்கி இன்புறுகிறாய். நின்னைச் சூனியமென்பார் பாழெனக் கூறுவர். ஐம்பெரும் பூதங்களே நீயென்பார் காலெனக் கூறுவர். ஐந்து கன்மேந்திரியங்களும், ஆகாயத்தின் இயல்பாகிய ஒலியும், காற்றும் உணர்வும், முக்குணமுடைய தீயும், நாற்பொறிகளால் உணரும் நீரும், ஐம்பொறிகளால் உணரும் நிலமும் மனமுட்பட்ட இந்திரியங்கள் ஆறும், அகங்காரமும், மூலமும் ஆகியவற்றால் எண்ணப்படும் சிறப்பை உடையவன். நீயேயாகிறாய். -

தீயினுள் தெறல் நீ

பூவினுள் நாற்றம் நீ கல்லினுள் மணியும் நீ

சொல்லினுள் வாய்மை நீ அறத்தினுள் அன்பு நீ