பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

• 76 கலித்தொகை பரிபாடல் காட்சிகள்

யாறும். மலையும், கடலும், அருவியும், பொய்கையும் முதலிய யாவும் இறைவன் சின்னங்களே. ஒவ்வொன்றிலும் தெய்வத முள்ளது. வையையும் அப்படிப்பட்ட ஒரு நதியே. அதன் வளத்தை இனி விரித்துக் காண்போம்.

வந்தது வெள்ளம்

நிறைந்து பரந்த கடலிலிருந்து கூட்டிச் செறிந்த நீர் கன்றியமேகக் குழாங்கள் தம் பொறையைத் தவிர்ப்பதற்காக மழையாகப் பொழிந்தன. யுகாந்த காலத்துப் பெருவெள்ளம் போலப் பாந்தது பாய்புனல், மலைச்சிகரங்களை மாசு கழுவி நீராட்டி மலைவாழ். விலங்கினங்களாகிய மான்கள் கலங்கி ஒட, மயில்கள் குரலெடுப்பப் பலப்பல அருவிகளாகப் கறங்கிப் பிறங்கி வீழ்ந்து அந்நீர்வெள்ளம். அருவிகளாக வீழ்ந்த அந்நீர் வேறுவேறு வழிகளிற் பிரிந்து சென்று இறுதியில் ஒன்று கூடிப் பரந்தயாறாகக் குற்றமில்லாத செஞ்சொற் கவிவாணர் புகழ்ந்து பாடிடப் பாய்ந்தது. அதுதான் வையை வளநதி, புனல் யாறாதலன்றிப் பூம்புனல் யாறாக வண்ணப் புனல் பரக்க வளம் பெருக்கும் வையையின் அவதாரம் பரிபாடலில் கீழ்க்கண்டவாறு கூறப்படுகிறது.

"நிறை கடல் முகந்து உராய்

நிறைந்து நீர் துளும்புந்தம் பொறைதவிர் பசைவிடப்

பொழிந்தன்று வானம் நிலம்மறை வது போல்

மலிர்புனல் தலைத்தலைஇ மலையவினங் கலங்க

மலைய மயிலகவ மலைமாசு கழியக்

கதழு மருவியிழியும் மலிநீ ரதர்பல

கெழுவு தாழ்வரை மாசில் பனுபவற்

புலவர் புகழ் புல