பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

哆

80

கலித்தொகை பரிபாடல் காட்சிகள்

தெனவழ ஒருசார் அகவயல் இளநெல் அரிகாற் சூடு தொகுபுனல் பரந்தெனத்

துடிபட ஒருசார் ஒதஞ் சுற்றிய

துரரென ஒருசார் கார்தும் பற்றது

வானென ஒரு சார்

(பரிபாடல்)

மாதர்-விரும்பத்தக்க, பாவை-வண்டலம் பாவை, அகவயல்-வயலி. னத கத்து, அரிகாற்சூடு-அரிபருவத்து முற்றிய நெல், ஒதம்-நீரலைப் பெருக்கு, தும்பு-அடைப்பு

வந்த வெள்ளம் நன்மை தீமை என்று பாராது பரந்து பரந்து எங்கும் பாய்கிறது. விளைநிலம், வதிநிலம், ஊர், காடு, நாடு வேறுபாட்டை அஃது எங்கே அறியப் போகின்றது? பாவ்ை செய்து விளையாடுகின்ற பெண் அதைச் செய்வதற்கு ஆகிய நேரங்கூட ஆகவில்லை-இந்த அலை அழிப்பதற்கு அவளுக்கு வருத்தமென்றால் வெள்ளத்திற்கு என்ன தெரியும் வருத்தம்.?

தைந்நீராடல்

தைந்நீராடலைப் பற்றிய செய்தி பரிபாடலில் வையைப் பற்றிய பதினோராவது பாடலிற் கூறப்பெறுகிறது; இத் தைந்நீராடல் என்னும் வழக்கைப் பரிபாடல் "அம்பாவாடல்' என்று குறிப்பிடுகிறது. தை மாதத்தில் புலர்காலை நேரத்தில் கன்னிப் பருவத்து மகளிர் தம் தாய்மாரோடு வையை யாற்றுக்குச் சென்று நீராடுவர். நேரமோ நல்ல வைகறை நேரம். வையை நீரோ அளவற்ற குளிர்ச்சி உடையதாக இருக்கிறது.

நீராடப் போகுபவர்களோ பொன்னனைய திருமேனிக் கன்னியிளம் பருவ மகளிர். கன்னிப் பருவத்து மகளிர் நீராடிச் செய்யவேண்டிய சடங்குகளை செய்துகாட்டுவதற்காக முதிய பார்ப்பன மகளிர் துணை வருகின்றனர். குளித்த ஈரம் புலராத