பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 83 & செறியிருண் மான்மாலைப் பாறைப் பரப்பிற்

பரந்த சிறைநின்று துறக்கத் தெழிலைத்தன்

iைர் நிழற் காட்டும் காரடு காலைக்

கலிழ்செங் குருதித்தே போரடு தானை யான்யாறு".

(பரிபாடல்)

மெளவல்-முல்லை, கழுநீர்-குவளை, அரவிந்தம்-தாமரை, குல்லை-துளசி, வகுளம்-மகிழ மலர், கலிழ-உதிர, மால் மாலை-மயக்கத்தைத் தரும் மாலை, சிறை-பக்கம், துறக்கம்-வானுலகு, எழில்-அழகு, கார்-இருள், காரடு காலை-வைகறை, போரடுதானையான்-பாண்டியன்.

துறக்கத்தின் எழிலைத் தந்நீர் நிழலின் கண் காட்டுமென்பது மேக மண்டலத்தோடு கூடிய புறவானத்தைக் காட்டுமென்னும் பொதுப் பொருளையுடையது ஆயினும், வையையாற்றின் பணி தத்துவத்திற்கும் இவ்வடிகளே விளக்கம் தருகின்றன. தன்நீரின் நிழலிலேயே துறக்கத்தின் சாயை யைக்காட்டும் என்றால் நீராடற் பயன் கூற வேண்டியதே இல்லை. "தெய்வீக" மென்பது இயற்கையின் அகடிதகெடித சர்வ - வியாபக ஸ்வரூபமே என்பது. நமது முன்னோர் முடிவு. அதுதான் நதிக்கும் "தெய்வீ"கம் தந்த மரபாகும். -

தென்னவன் திருநகரச் சிறப்பு

அன்றும் சரி இன்றும் சரி தமிழ்நாட்டின் தலைநகராகக்" கலைநகராக விளங்குகின்ற பெருமை மதுரைக்கு உண்டு. கூடல், மதுரை என்பன அதன் தொன்று தொட்டு வந்தவழக்குடைய பழம்பெயர். ஆலவாய் என்பது இறைவனடியார் பாடல்களில் இடுகின்ற பெருமை பொருந்திய தெய்வீக முறையில் வந்த பெயர். இம்மதுரைக்குரிய பரி பாடல்கள் நான்கு என்று முன்பே சொன்னோம். அந்நான்குமே இப்போது கிடையாவாயினும் அவைகளின் உறுப்புக்களாகிய சில பாடல்கள் உள்ளன.