பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 86 கலித்தொகை பரிபாடல் காட்சிகள் இதழ்களுக்கு நடுவே இருக்கக்கூடிய பொகுட்டைப் போல அமைந்துள்ளது அண்ணல் இறைவனின் ஆலயம். தாமரைப் பொகுட்டிலே தேனுள்ளது போலத்தான் மதுரையில் தமிழ்க்குடிகள் வாழ்ந்து வந்தன.

அத்தேனை நாடி ரீங்காரம் செய்து கொண்டு வரும் வண்டினைப் போலப் பரிசிலை நாடிப் பாடி வருகின்றனர் பரிசில் வாழ்நராகிய குடியினர்.

மறை முதுகிழவன் உரைசெய்த பழமறைகளை வைகறைப் பொழுதிலே அந்தணர்கள் ஒதுகையினாலே அக்குரலைக் கேட்டு ஊர் துயிலெழுதலல்லது, சேரன் தலைநகராகிய வஞ்சியையும் சோழன் தலைநகராகிய உறையூரையும் போலக் கோழிகவும் குரலைக் கேட்டுத் துயில் எழுதலை உடையது அல்ல இம்மதுரைத் திருநகர்!

"மாயோன் கொப்பூழ்

மலர்ந்த தாமரைப் பூவொடு புரையுஞ் சீறார் பூவின் இதழகத் தனைய

தெருவ மிதழகத் தரும்பொகுட் டனைத்தே

யண்ணல் கோயில் தாதின் அனையர்

தண்டமிழ்க் குடிகள் தாதுண் பறவை யனையர்

பரிசில் வாழ்நர் பூவினுட் பிறந்தோன்

நாவினுட் பிறந்த நான்மறைக் கேள்வி

நவில்குரல் எடுப்ப ஏம இன்துயில்

எழுதல் அல்லதை வாழிய வஞ்சியுங்

கோழியும் போலக் கோழியின் எழாதெம்