பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 87 ふ பேரூர் துயிலே!"

- (பரிபாடல் - மதுரை)

மாயோன்-திருமால், புரையும்-ஒக்கும், அண்ணல்-இறைவன், தாது-தேன், பறவை-வண்டு, பூவினுட் பிறந்தோன்-பிரமதேவன் ஏம இன்துயில்-களிப்பு மிக்க இனிய தூக்கம், வஞ்சி-சேரர் தலைநகர், கோழி-சோழர் தலைநகராகிய உறையூர், பேரூர்-பெரிய ஊராகிய மதுரை.

என்று இந்த வியக்கத்தக்க நகரின் அமைப்பை வரைந்து காட்டுகிறது பரிபாடல். இன்றும் இவ்வமைப்பு மதுரை நகரைப் பொறுத்தவரையில் பெரும்பாலும் சிதைவு எய்திவிடவில்லை. ஊருக்கு நடுவில் உத்தமன் கோயிலும் தமிழ்க்குடி மக்கள் வாழும் தலைமை வீதிகளும் பிறவும் எல்லாம் முறையாகவே அமைந்திருக்கின்றன. அன்று புலர் விடியலில் கேட்ட மறையொலி இன்று கேட்கவில்லை. அன்று நான்மறை ஒதிய வாய்கள் இன்று வேறு துறைகளில் வேலை செய்யப் புகுந்து விட்டன! வேறுபாடு இந்தச் சிறிய அளவு தானுண்டு. திருமகள் நெற்றியில்

ஒரு திலகம்!

தமிழை வேலியாகக் கொண்ட தமிழ் நாட்டினுள்ளே எங்கும் புகழ் மணம் பரப்புவதாகப் பொலிவு எய்துவதின்றி மதுரை நகரின் மாண்பு குன்றுவது என்றும் இல்லை. தெய்வத் திருப்பரங்குன்றம் நிலைத்து நிற்கின்ற வரையில், செவ்வேள் திருவருள் வாழ்வோர்க்கு உள்ள வரையில் மதுரை மாண்பிற் குறையாத பதியாக வாழ்ந்தே தீரும்.

"தண்டமிழ் வேலித்

தமிழ் நாட்டகமெல்லாம் நின்று நிலை இப்

புகழ்பூத்தலல்லது குன்றுத லுண்டோ?

மதுரை கொடித்தேரான் குன்ற முண்டாகு மளவு"

(பரிபாடல்-மதுரை)