பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 89 *

சுந்தர காண்டப் பெயர் விளக்கம்

- கம்பன் செளந்தரியக் கலை

(தோற்றுவாய்) காப்பியத்தின் செளந்தரிய நிலை அதன் நடுமையமாக அமையும்; நிகழ்ச்சிகளைப் பொறுத்து அமையும். காப்பியக்கலையின் நுணுக்கங்களையும் ஏற்ற இறக்க உணர்ச்சித் தரங்களின் வரம்புக்கு உட்பட்ட போக்கையும் நன்கு உணர்ந்த மகாகவி அந்த நிகழ்ச்சிகளில் செளந்தரிய அமைப்புச் செறிய வைத்துக் காட்டுவான்.

காப்பிய நேயர்கள் முற்றிலும் தம்மை மறந்து ஈடுபடத்தக்க அம்சங்கள் அப்போது பூரணமாக இருக்கும். இராமாயணத்தைப் பொறுத்தமட்டில் சுந்தரகாண்டம் அத்தகைய செளந்தரியக் கலைக் களஞ்சியமாக விளங்கும் தகுதியைத் தனக்கே உரியதாகப் பெற்றுக் கொண்டுவிடுகிறது. இராமாவதாரக் கதையின் பாவிகக் 35(55.35 (Central idea of the Epic) Joã37.5m Gori 333igorror Guégif சேர்கின்றது. சுந்தரகாண்டத்திற்கு உள்ள இந்தத் தன்னிகரற்ற தனிச்சிறப்பு கம்பனுடைய செளந்தரிய சாகசத்தால் பன்மடங்கு ஒளிபெற்று விளங்குகிறது. மற்றொரு செய்தி பொதுவாக இங்கே காரணம் ஆராய்வதற்கு ஏற்றதாகிறது. அயோத்தியில் நிகழும் நிகழ்ச்சிகளைக் கூறும் காவியப் பகுதிக்கு அயோத்தியாகாண்டம் என்று பெயர். அதே மாதிரியே, ஆரணியகாண்டம், கிஷ்கிந்தா காண்டம் என்ற பெயர்களும் ஏற்பட்டன. இந்த முறைப்படி பார்த்தால் இலங்கையில் நடைபெறும் நிகழ்ச்சிகளையே பெரும்பாலும் கூறும் இக்காண்டத்திற்கு "இலங்கா காண்டம்" என்பது போன்ற ஓர் பெயரல்லவா பொருத்தமாக வழங்கப்பட்டிருக்க வேண்டும்?

கம்பனும் வால்மீகியும் சுந்தர காண்டம் என்றே பெயரை அமைத்துக் கொண்டது ஏன்? கூறப்படும் நிகழ்ச்சியை ஒட்டிப் பெயரை அமைக்காமல் நிகழ்ச்சியின் செளந்தரியப் போக்குக்கு ஏற்பப் பெயரிட்டுக் கொள்வானேன்? செளந்தளியம் இருப்பதனால் பெயரிட்டனர் என்றால் ஏனைக்காண்டங்களில் அந்த செளந்தரியம் இல்லாமற் போய்விட்டது என்று பொருளா? இதனைச் சற்றே விரித்து விளக்கல் வேண்டும். காவியதாயகனிடமிருந்து பிரிக்கப்பட்ட நாயகி அந்தப் பிரிவினாலே அடையக் கூடிய கலக்கத்தில் சோகபாவத்தோடு