பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 90 கலித்தொகை பரிபாடல் காட்சிகள்

கூடிய சிருங்கார மென்மை அமைந்திருக்கிறது. மனத்தை உருக்கும் நிலையில் பிரிவுழிக் கலங்கள் என்னும் இந்தச் சுவையைப் பிராட்டியின்பால் விளங்குவதாக அமைத்துச் காட்டும் செளந்தரியம் இக்காண்டத்தில் உள்ளமையால் இது சுந்தரகாண்டமாயிற்று என்பர்.

இது விப்பிரலம்ப சிருங்காரம் எனப்படும். இஃது ஒருவகையால் ஏற்கும் காரணமேயாகும். இனி, அனுமன் தாது மூலமாக இராமனின் செளந்தரியங்களைச் சீதையும், சீதையின் கற்புநிலை பிறழாத மனத்திண்மையாகிய செளந்தரியத்தை இராமனும் அறிந்து கொள்கையினால் சுந்தரகாண்டமாயிற்று என்றும் ஒர் அழகான அமைதி கூறலாம். உருக்காட்டு படலம் முதலிய படலங்களில் தேவியைக்கண்டு அனுமன் இராமபிரானின் சுகசெளகரிய நிலைகளை விவரிப்பதும், திருவடி தொழுத படலத்தில் தேவியின் மனம்பிறழாத தூய்மையை இராமனுக்கு உரைப்பதும், இக்காண்டத்தில் இடம் பெறுகின்றமை இங்கே சிந்திக்கத்தக்கது.

பேண நோற் றனுமனைப்

பிறவி பெண்மை போல் நானம் நோற் றுயர்ந்தது

நங்கை தோன்றலான் மாணநோற் றீண்டிவள்

இருந்தவா றெலாங் கரன நோற்றிவனவன்

கமலக் கண்களால் -

(காட்சிப்படலம்-73)

நோற்றல்-தவம்செய்தல் கமலக்கண்-தாமரைப் போலுங் கண்கள்.

என்று அனுமன் சீதையின் பதிவிரதா சக்தியை - அதன் மகாசெளந்தரியத்தைத் தான்கண்டு, இராமன் காணவில்லையே என்று மனம் நோவதாகக் கம்பன் கூறும் பாட்டில் இக்கருத்து உட்பொதிந்து தோன்றுகின்றது. "இராமாயணம் சிறையிருந்தாள் ஏற்றம் கூறும்" என்ற வைணவ வியாக்கியான கர்த்தாவும் சீதையின் பெருத்த புகழுக்கும் இக்காண்டத்தின் சிறப்புக்குமே சான்றாகின்றார். அனுமனுக்குச் சுந்தரனென்று பெயருண்டு. அவன் முக்கியனாக நின்று நிகழ்த்தும் காண்டமாதலால் இது