பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 91 &

சுந்தரகாண்டமானது என்றும் ஒரு சாரார் கூறுவர். இதைப் போலவே "மற்றைப் பகுதிகளினும் செளந்தரியம் பெரிதும் மிகுந்து செறிந்திருக்கிறதா ன்கயினால் சுந்தரகாண்டமாயிற்று, என்ற பிரிதோர் காரணத்தைப் பிரிதோர் சாரார் மொத்தமாகக் கூறிவிடுகின்றனர்.

வட்டத்திற்கு நடுப்புள்ளிபோல் இராமாவதாரத்தின் காரணம் சுந்தரகாண்டத்தில்தான் இருக்கிறது என்ற பேருண்மையை நேரடியாக விளக்குவதாக இருக்கவேண்டும் இப்பெயருக்குக் கூறுகின்ற காரணம். "காவியத்தின் பாவிகம் முற்றிலும் மலர்ந்து முழுமணம் பரப்புவது இக்காண்டத்திலேதான், என்னும் உட்கிடக்கையினாலேயே இரண்டு மகாகவிகளும் இவ்வாறு பெயரிட்டனர் என்று கூறினால் இதுவரை கூறிய காரணங்களும் இக்கூற்றின் சிற்றங்கங்களாக அமைந்து உள்ளடங்கிப் போகும். "சீதையின் சிறைப்பாடு" இராமாயணக்கதையானது போ ல் "ஹெலனின்" சிறைப்பாடு "இலிக்கயாதாகியது. ஹோமரின் அந்த மகாகாவியத்தின் சூத்திரப்பொருள் தெளியும் மேல்நாட்டு விமர்சகர்கள் இவ்வாறே தெளிந்துரைப்பர். காவியத்தை அலங்கரிக்கும் பொதுவான குணம் ஒன்று அவசியம் இருக்க வேண்டும். அதைக் காவியத்தின் அழகையெல்லாம் விளக்கும் மூல செளந்தரியம் என்று கூறுவதில் யாருக்கும் ஆட்சேபனை இருக்கமுடியாது.

அந்த செளந்தரியத்தை அலங்காரநூலார் பாவிகம் என்று கூறுகின்றனர். பாவிகத்தைக் காவியத்தின் முழுமுதல் அலங்கார குணமாகக் கொள்வது என்ற முறைப்படி சுந்தரகாண்டம் என்ற பெயர் இதே காரணத்தைப் பொருத்தமாக ஏற்றுச் சிறக்கின்றது. சுந்தரம் என்றால் "மங்களகரமான அழகு" என்று பொருள். காண்டம் என்பதற்குச் சேர்க்கை, இயைபு, கூட்டம், தொகுதி என்பன பொருள்கள். பாவிகத்தன்மை பொதிந்திருப்பதனால் "கடலைத் தாவிக் கற்பின் செல்வியைக் கண்டு கணையாழி கொடுத்தபின் மீண்டு திருவடியைத் தொழுகின்றவரை" இக்காண்டமெங்கும் இடையறவின்றிச் செளந்தரியம் பின்னிக் கிடக்க வேண்டும். காண்டமென்பதற்குச் செய்யுட்களின் கூட்டம் என்று மட்டும் பொருள் பெற்று அமைந்துவிடுவோமானால் மேற்கூறிய நயத்திற்கு இடமின்றிப் போகும்.