பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 94. கலித்தொகை பரிபாடல் காட்சிகள் அழகுத் திருநகரில் அனுமன் !

கடலைக் கடந்தபின் இலங்கையை அடைகிறான் அனுமன். அவன் இலங்கையைச் சுற்றிக் கண்டு கொண்டே சீதையைத் தேடும் பகுதிக்கு "ஊர்தேடு படலம்" என்பது கம்பன் இட்ட பெயர். ஊரில் சீதையைத் தேடும் படலம் என்பது இதன் விரிபொருள். நஞ்சு பொருந்திய நல்லபாம்பைக் கல்லிலே செதுக்கினாலும் சிற்பி அதனை இலட்சணம் குறையாமல் தானே செதுக்க வேண்டும்? இராவணன் வசிக்கும் நகரமானாலும் கவி தன் வருணனையைச் செய்தலில் தவறிவிடக்கூடாதே? இலங்கை ஒர் அழகுத்திருநகர் என்ற முறையிலேயே கம்பனுடைய பாடல்கள்_பேசுகின்றன. ஏறக்குறைய இருநூற்றிருபது பாடல்களைக் கொண்ட ஊர்தேடு படலம் இக்காண்டத்திலேயே மிகப் பெரிய படலங்களுள் ஒன்று. இதில் மிகப் பெரும்பான்மையான பாடல்கள் இலங்காபுரியின் செளந்தரிய வருணனைக்கே செலவிடப்படுகின்றன. இப்படலத்தில் சத்திரோதய வருணனை சிறுபான்மை வருவதைக் கொண்டு சில பிரதிகளில் "நிலாத் தோற்று படலம்" என்று பெயரெழுதியுள்ளனர். இன்னும் இலங்காதேவி தேவிபடலம், இலங்கை மாதேவிபடலம், இலங்கைமாதேவி வதைப்படலம் என்றும் பெயர்கள் பிரதிகளில் காணப்படுகின்றன. அவையாவும், "ஊர்தேடுபடலம்" என்னும் பெயரைப் போல்பெருந்துவனவாகா. நிலாத்தோற்றத்தின் அழகு கவியால் புனைந்துரைக்கப்படும் இடத்தில் தனிவனப்பைக் கண்டு அப்பெயர் எழுந்தது போலும்.

"பொன் கொண்டிழைத்து

மணியைக் கொடு பொதிந்த மின்கொண்டிழைத்த

வெயிலைக் கொடுசமைத்த என்கொண்டியற்றிய எனத்தெரிகிலாத வன்கொண்டல் தாவி

மதிமுட்டுவன மாடம்"

(ஊர்தேடுபடலம்)

கொடு-கொண்டு, கொண்டல்-மேகம், மதி-சந்திரன்