பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

•o 96 கலித்தொகை பரிபாடல் காட்சிகள் காண்கிறோம். நல்லவர்கட்கு வரும் துன்பத்தை அவர்கள் புன்சிரிப்போடு பொறுத்துக்கொள்வதில் ஏதோ பக்திக்குரிய அழகு ஒன்று இருக்கிறதல்லவா? அதே அழகு இங்கே தேவியின் பிரிவுத் தோற்றத்திலும் திகழ்கிறது அந்த அழகு எல்லையற்ற பரப்புடையது.

துப்பினாற் செய்த கையொடு

கால்பெற்ற துளிமஞ்சு ஒப்பினான்தனை நினைதொறுங்

நெடுங்கண்கள் உகுத்த அப்பினால் நனைந்து அருந்துயர் உயிர்ப்புடை யாக்கை வெப்பினாற் புலர்ந்து ஒருநிலை

உறாத மென்றுகிலாள்.

(காட்சிப்படலம் 2) துப்பு-பவளம், மஞ்சு-மேகம், அப்பு-கண்ணிர், யாக்கை-உடல் துகில்-ஆடை என்று இராமனின் திருமேனியழகை உருவெளியில் கண்டு நினைவுகளெல்லாம் அவன் மாயமாய்க் கண்ணிர்வடிக்கும் ஓர் காட்சியைக் கம்பன் சொல்லும்போது அதில் மானசீகமான ஆனால் சோகக் கலப்புடன் கூடிய ஒருவகைக் கவின் இருக்கத்தான் வேண்டுமென இருக்கிறது.

கருதி நாயகன் வரும்வரும்

என்பதோர் துணிவால் கருதி மாதிரம் அனைத்தையும்

அளக்கின்ற கண்னாள்

(9)

என்று அடுத்த பாட்டில் கூறும்போது அந்தக் கவிதைக் கவின் பன்மடங்கு உயர்வதோடு அல்லாமல் தனிக் காம்பீரியமும் பெற்று