பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 97 & விடுகிறது. உண்ணுதற்கு யார் அடகிடுவாரோ? விருந்தினர் வந்தால் என்நாயகன் யான் இன்றி அவரை எவ்வாறு பேணுவானோ?" என்று பிராட்டி நினைப்பதாக வரும் பாடல் கருத்து நுணுக்கம் பொதிந்து தோன்றக் காண்கிறோம். இராமன், ‘மெய்த்திருப்பதம் மேவுக' என்ற போதும், காடு செல்க, என்ற போதும் சித்திரத்தின் மலர்ந்த செந்தாமரை போல் இருந்த நிலையைச் சீதை நினைப்பதாகக் கம்பர் கூறும் பாடலில் மனோபாவ உன்மையைத் தேடினால் காவிய இரசிகன் அழுது விடுவான். அத்தனை சோகானுபவம் பாடலில் இழைந்துள்ளது. திரிசடையும் பிற அரக்கியரும் சூழ நடுவே தேவி வீற்றிருந்த நிலையை அனுமன் காண்கின்றான். இதற்குமுன் திரிசடை நன்னிமித்தம் அறிந்துரைத்தாலும் கனவு கூறுதலும் ஆகிய நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன. பின்னர்த் துயின்று கொண்டிருந்த அரக்கியர் எழுந்து படைகளுடன் திரளுதலும் அவர்களுக்கு நடுவே அனுமன் சீதாதேவியை ஐயமற உற்றுநோக்கி மீண்டும் தெளிதலும் கூறப்படுகின்றன. 'அறன் இன்னும் அழியவில்லை" என்று கம்பன் அனுமனை எண்ணச் செய்கிறான். பிராட்டியைக் கண்டு அவன்தன் மனத்துள் எண்ணுவதாக வரும் பாடல்களையும் கவிக்கூற்றாக வரும் பாடல்களையும் ஒரு சேர,நோக்கினால் துன்பத்தின் தெய்வீக வனப்பால் இக்காட்சிப்படலமும் காண்டப்பெயருக்கு ஏற்றதாகிறது. கொடுமைக்கு முன்னால்?

அனுமன் அசோகவனத்தில் நிகழ்வனவற்றையும் அரக்கியர் சூழலில் சிதை வெம்புலிக் குழ்ாத்தின் நடுவே மான்பேர்லத் தோற்றுவதையும் மறைவாக இருந்து கண்டுகொண்டிருந்த போது ஆரவாரத்துடன் அங்கே தோன்றினான் இராவணன். "பன்மணிமகுடம் இளவெயிலெறிப்பக் கங்குலும் பகல்பட வந்தான், என்று அவன் வரவைக் கவிதையுரிமையோடு

$$17