கலித்தொகை - பாலைக் கலி
61
அவ்வழியில் செல்லும் தன் கணவனோ, கொடுத்த வாக்குறுதியை மறந்து செல்கிறான்; அதனால், வழிக்கொடுமை தரும் துன்பங்களோடு, அறம் தவறிய அவனை ஞாயிறு முதலாகிய இயற்கைத் தெய்வங்களும் துன்பம் செய்யுமோ?' என அஞ்சினாள். அஞ்சியவள், தோழியை அழைத்து, அவனுக்கு எக்கேடும் செய்யாது காக்குமாறு அக்கடவுள்களை வேண்டிக்கொள்ளலாமோ எனக் கேட்கத் தலைப்பட்டாள்; அந்நிலையில் போன கணவனும் பொருளீட்டிக்கொண்டு வந்துவிட்டான்; அது கண்டதோழி, 'பெண்ணே! உன் வழிபாடு இனித் தேவை இல்லை; அவர் வந்து விட்டார்' என்றது இது:
"பாடு இன்றிப் பசந்தகண், பைதல் பனிமல்க,
வாடுபு வனப்புஓடி, வணங்குஇறை வளைஊர,
ஆடுஎழில் அழிவு அஞ்சாது அகன்றவர் திறத்து, இனி,
நாடுங்கால், நினைப்பது ஒன்று உடையேன்மன்;
அதுவுந்தான்
தொன்னலம் தொலைபுஈங்கு யாம்துயர் உழப்பத்துறந்து
உள்ளார்
5
துன்னி நம்காதலர் துறந்து ஏகும் ஆர்இடைக்
கன்மிசை உருப்புஇறக், கனைதுளி சிதறுஎன
இன்னிசை எழிலியை இரப்பவும் இயைவதோ?
புனையிழாய்! ஈங்குநாம் புலம்புஉறப், பொருள்வெஃகி
முனைஎன்னார் காதலர் முன்னிய ஆற்றிடைச்
10
சினைவாடச் சிறக்கும்நின் சினம்தணிந்து ஈகெனக்
கனைகதிர்க் கனலியைக் காமுறல் இயைவதோ?
ஒளியிழாய்! ஈங்குநாம் துயர்கூரப் பொருள்வயின்
அளிஒரீஇக் காதலர் அகன்று ஏகும் ஆரிடை
முளிமுதல் மூழ்கிய வெம்மை தீர்ந்து உறுகென
15
வளிதரும் செல்வனை வாழ்த்தவும் இயைவதோ?
எனவாங்கு,
செய்பொருள் சிறப்புஎண்ணிச் செல்வர்மாட்டு, இணையன
தெய்வத்துத் திறன்நோக்கித் தெருமரல்; தேமொழி!
வறன்ஓடின் வையகத்து வான்தரும் கற்பினாள்
20