6
கடுங்கோன் பாடியிருத்தலாலும், குறிஞ்சித் திணை பற்றிப் பல செய்யுட்களைக் கபிலர் பாடியிருத்தலாலும், முதலிரண்டு கலிகளை இவர்கள் பாடினார்கள் எனக்கொள்ளினும், ஏனைய மூன்றையும் மற்றப் புலவர் மூவரும் பாடத்தகுதி வாய்ந்தவர் என்பதற்குரிய சான்று ஏனைத் தொகை நூல்களில் காணக்கூடவில்லை, மருதன் இளநாகனார் பிறநூல்களில் பாடியனவாகக் காணப்படும் 39 செய்யுட்களில் பாலை பற்றி 17-ம் குறிஞ்சி பற்றி 9-ம், முல்லை பற்றி 5-ம், நெய்தல் பற்றி 5-ம் மருதம் பற்றி மூன்றுமே உள்ளன. இவர் மருதக்கலியைப் பாடினார் என்பது பொருந்துவதாக உள்ளதா? சோழன் நல்லுருத்திரன் புறநானூற்றில் ஒரு செய்யுளே (190) பாடியதாகத் தெரிகிறது. அவன் பாடிய பா ஒன்றும் வேறு தொகை நூல்களில் இல்லை. அவன் முல்லைக் கலியைப் பாடினான் அவ்வெண்பா கூறுகிறது. நல்லந்துவனார் நெய்தல் திணையில் ஒரு செய்யுளும் செய்திலர். அவர் நெய்தற்கலியைப் பாடியதாக வெண்பா விளம்புகிறது.
2. முல்லைக் கலியில் கூறப்படும் முல்லை நில மக்கள் பாண்டிய நாட்டவராகக் காணப்படுகின்றனர். அவர்கள் பாண்டியனை வாழ்த்துவதாகச் செய்யுள் கூறுகிறது. சோழ வேந்தன் தனது நாட்டு முல்லை நில மக்களைப் பாடாதது வியப்பே அன்றோ? சோழ அரசன் தனது நாட்டு மக்களைப் பற்றிப் பாடாமல், பாண்டியநாட்டு முல்லை நில மக்களைப்பற்றி மட்டும் தனது முல்லைக்கலியில் பாடினான், என்னால் சற்றும் பொருந்தாது. முல்லை நிலம் பாண்டியர்க்கே உரிமையுடையதுமன்று. பாண்டியனை வாழ்த்திப் பரவும் ஒரு குறிப்பிட்ட முல்லை நிலத்தாரைப் பற்றிச் சோழ வேந்தன் நூல் பாடினான் என்பது அறிவிற்கும் அநுபவத்திற்கும் சற்றும் பொருந்தாததாகும்.
3. நெய்தற் கலியைப்பற்றி ஒரு சிறு செய்யுளும் ஏனைய தொகை நூல்களுட் பாடியிராத ஒருவர், நெய்தற்கலியைப் பாடினார் என்பது, கருக்கொள்ளாது மகப்பேறு தோன்றினாற் போலாகும் அன்றோ?
4. 'கலித்தொகை முழுவதும் நன்கு ஆராயின், செய்யுட்கள் ஒரே ஆசிரியர் இயற்றின என்பது புலனாகும். இதனை ஒப்புக்கொள்ள மனமற்றவர் இவ்வெண்பாவினை வெளிக்கிளம்ப
1. K.N.Sivaraja Pillai's "The Chronology of the early Tamils" P.35