பக்கம்:கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
10
கலீலியோவின்
 


அவருக்குப் பிறகு போர்த்துக்கீசிய பிரயாணிகள் சிலர் 1487-ம் ஆண்டில் பார்த்தோலோமி டயாஸ் என்பவர் தலைமையின் கீழ் ஆப்ரிக்காவின் தென்கோடி முனைவரை. சென்றார்கள்,

வாஸ்கோட காமா 1493ம் ஆண்டில் ஆப்ரிக்காவைச் சுற்றி இந்து மகாப் பெருங்கடலைக் கப்பலில் கடந்து இந்தியா வந்து சேர்ந்தார். சில பயணிகள் சீனக்கடலை அடைந்து சீனாவைச் சென்று சேர முயற்சித்தார்கள்

கொலம்பஸ் 1492-ம் ஆண்டில், சாண்டா மரியா என்ற கப்பலில் மேற்கு நோக்கிப் பயணம் செய்தார். அவர் சில தீவுகணைக் கண்டார். சீனாவுக்கோ இந்தியாவுக்கோ ஜாக்கிரதையாக வந்து சேர்ந்து விட்டதாக அவர் எண்ணினார். அதனால், அந்தத் தீவுகளுக்கு மேற்கு இந்தியத் திவுகள் WEST INDIES என்று பெயரிட்டார்.

இவ்வாறு கடந்த காலத்தில் நடந்த கண்டு பிடிப்புகள் எல்லாம்; இப்போது நமக்குத் தெளிவாகத் தெரிவதால் அக்காலத்தில் கண்டு பிடிப்புகளையும், வேதாந்தத் தத்துவங்களையும், அரசியல் கொள்கைகனையும் ஒன்றாகச் சேர்த்தப் பொருத்திப் பார்க்க நம்மால் இப்போது முடிகிறது.

ஆனால், எதிர்கால சரித்திர ஆசிரியர்கள் நமது பின் தலைமுறை சந்ததியாரைப் பார்த்து, அவர்கள் கண்டு பிடித்தவைகளைப் பற்றி எதிர்கால மக்கள் புரிந்து கொன்டார்களா? என்று கேட்கக் கூடும் அல்லவா?

3 கலீலியோ காலத்து மக்கள் மனநிலைகள்

இந்தச் சூழ்நிலையில், கலீலியோ காலத்தில் வாழ்ந்த மக்கள் எவ்வாறு இருந்தார்கள் என்பதையும் நாம் தெரிந்து-