பக்கம்:கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்
13
 

களும், மற்ற பிற கோள்களும் விண்மீன்களும், நாள் தோறும், நாம் வாழும் பூமியையே சுற்றிச் சுற்றி வலம் வருவதாக நம்பி வந்தார்கள்.

இந்தக் கருத்து வானியல் இயக்க உண்மைகளுக்கு நேர்விரோதமானது என்கிற உண்மையை தாம் இன்று படித்தும் கேட்டும் வருகிறோம்,

ஒரு காலத்தில், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய ஐந்து கோள்களும் வானவியல் பரப்பில் உலவி வருகின்றன் என்றும், மற்ற தோள்கள் எல்லாம் சலனம் இல்லாமல் அப்படியே நிற்கின்றன என்றும் அக் காலத்து மக்கள் நம்பினார்கள்.

ஆனால், இன்று பூமி உள்ளிட்ட கோள்கள் எல்லாமே வானவெளியில் பவனி வந்து கொண்டிருக்கின்றன என்று நாம் ஆறிவோம்.

அன்றைய மக்கள் வானவெளியில் காணப்படும் கோள்கள் எல்லாம் எந்தெந்தப் பொருட்களால் ஆக்கப் பட்டவை, எதனால் இப்படி இயங்குகின்றன? எந்த வழியில் சுற்றுகின்றன? உலகம் என்பது என்ன? சூரியன் நட்சத்திரங்கள் இவற்றின் பிறப்பு வளர்ப்பு என்ன? என்ன போன்ற உண்மைகளை இவர்கள் அறிந்திருக்கவில்லை.

இன்றைய தினம் நாமோ, அவைகள் சூரியனுடைய சக்தியால் கவரப்பட்டு, அவை எல்லாமே வான் வெளியில் தம் விருப்பபடி ஓடிப்போகாமல், ஒரு குறிப்பிட்ட ஓடு பாதை வழியாகவே சூரியனைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கின்றன் என்றும், நம் பூமி உள்ளிட்ட கோள்கள் சூரியனுடைய குடும்பத்தைச் சேர்ந்தவை என்றும் நாம் அறிகின்றோம்.

தங்களது சாதாரணக் கண்களையே நபிேயப் பழங்கல மக்கள்! விண்மீன்கதைக் கண்டு தெரிந்து கொண்டார்கள்.