பக்கம்:கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

கலீலியோவின்


5. கை நாடித் துடிப்பால் பெண்டுல நேரத்தை கணக்கிட்டார்

ஒரு நேரத்தில் கலீலியோ சிறுவனாக இருக்கும்போது பைசா நகரத்துத் தேவாலயத்தில் தொழுகைக்கான வழிபாடுகளைச் செய்தார்.

அவர், இவ்வாறு வழிபாடுகளைச் செய்து வந்த ஒரு நாளன்று இருண்ட நேரமாகி விட்டது. அப்போது ஒரு பணியாள் அந்த தேவாலயத்தின் கூரை மீது தொங்கவிடப்பட்டிருந்த ஒரு விளக்கை தீப ஒளிக்காக ஏற்றினார்.

கலீலியோவுக்கு அந்த பணியாள் செய்த வேலை ஒரு வேடிக்கையாக இருந்தது. அதனால் அவர் அதே விளக்கைத் தனது கைகளாலேயே இழுத்து வேகமாக ஊசலாடவிட்டார்.

அப்போது அந்த ஊசலிலே ஓர் ஆற்புதத்தைப் பார்த்து அதோடு அதில் மறைந்திருந்த ஓர் உண்மையினைக் கண்டுணர்ந்தார். என்ன அந்த உண்மை?

கலீலியோ அந்த தேவாலய விளக்கை இங்கும் அங்குமாக ஆடவிட்டு, அந்த ஊசலாட்டத்தில் அவர் கண்ட உட்பொருனைத் தேட முயன்று ஆராய்ச்சி செய்த காலம் இருக்கிறதே, அந்தக் காலம் வரை, கடிகாரத்தின் தற்போது ஆடிக்கோண்டிருக்கிறதே ஒரு தொங்கல், அதாவது பெண்டுலம் என்று பெயர் பெற்றுள்ள ஒரு பொருள், அதையாரும் கண்டுபிடிக்காத காலமாகும்.

தினந்தோறும் கலீலியோ அந்த தேவாலயத்தின் வழிபாடுகளுக்காக வரும்போதெல்லாம், அங்கு நடைபெறும் உருக்கமான தொழுகையையும் கூடி கவனிக்காமல்,