பக்கம்:கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்
19
 

பிரார்த்தனைக்கு முன்னும் பின்னும் அவர் அந்த விளக்கினையே ஊசலாட விட்டு: அந்த ஆட்டத்திலேயே தனது முழுக்கவனத்தையும் செலுத்தி மூழ்கிக் கிடந்தார்.

விளக்கு ஆரம்பத்தில் அதிக நேரம் ஆப்படியும் இப்படியுமாக அதிக நீளமாக ஊசலாடியது. பிறகு, அதன் வேகம் குறையக குறைய ஊசலாட்டம் மெதுவாகக் குறைந்துவந்தது.

ஊசல் குறைந்து வந்த காலத்தை உற்றுப்பார்த்தனர். ஏனென்றால், காலத்தைத் துல்லியமாக கணக்கிடத்தக்கக் கூடிய கடிகாரமோ, கருவியோ அன்றுவரை கண்டு பிடிக்கப்படாத காலமாகும்.

அதனால்,கலீலியோ அந்தக் குறைந்து வந்த காலத்தை அவர் உற்று உற்றுப் பர்த்தார்! ஊசலின் நேரத்தைக் கணக்கிடத் தக்கதொரு வழியைக் கண்டு பிடித்தால் என்ன என்ற ஆர்வம் அவருக்கு ஏற்பட்டதால்தான், அந்த ஊசலின் குறைவான நேரத்தை உற்றுப் பார்த்து ஒரு புதிய ஆய்வை அவர் மேற்கென்னலானார்.

அதாவது, அவர் தனது கைவிரலால் தம் நாடித் துடிப்பைக் கணக்கிட்டு, ஊசலின் குறைான ஆட்ட நேரத்தைக் கணக்கிட்டுப் பார்த்தார். இவ்வாறு ஒரு முறையல்ல; பலமுறை சோதனை செய்தார்!

ஊசலின் ஆட்டத்தூரம் நீண்டதனாலும், குறுகிய தானாலும், விளக்கு எடுத்துக் கொள்கிற ஊசல் நேரம் ஒன்றேதான் என்பதைத் தனது நாடித்துடிப்பின் கணக்கு மூலம் அவர் கண்டுபிடித்தார்! அவருக்கே அவரது அரிய செயல் ஒரு வியப்பாக அமைந்துவிட்டது.

சுவற்றில் மாட்டிடும் கடிகாரம் இல்லாத அந்தக் காலத்தில், தேவாலய விளக்கை அலைய விட்டு அலைய விட்டுத் தன்னுடைக் கைகளின் நாடித்துடிப்புக்களைக்