பக்கம்:கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
25
கலீலியோவின்
 

கணக்கு வைத்துக் கொண்டு, அதைக்கணக்கிட்டுக் கணக்கிட்டு, ஊசலின் தூரம் ஆரம்பத்தில் ஏற்படுகின்ற அதிக நீளமுடையதானாலும் ஆல்லது நின்று போகக் கூடியக் காலத்தில், ஊசலாடிடும் மிகக் குறுகிய நிலையையுடையந்தாலும், அதன் ஊசல்நோம் ஒன்றே என்று உறுதியாகக் கண்டு மகிழ்ச்சியடைந்த செயல் செயற்கரிய செயலாக இருத்தது!

இந்த முதல் பெண்டுலம் ஆய்வை, ஊசல் நேரத்தை, தொங்கல் ஓட்டக் கணக்கைக் கண்டு பிடித்துக்காட்டிய போது அவருக்கு என்ன வயது தெரியுமா? பத்தொன்பதே வயது பல்கலைக்கழகக் கல்விகற்கும் கல்வி வயதுதான் என்றால் வியப்படையாதவர் யார்?

கலீலியோ, அவர் கண்டு பிடித்த உண்மையினைத் தோடர்ந்து தனது வீட்டிலேயே பல சோதனைகள் மூலமாக திரும்பத் திரும்பச் செய்து பார்த்தார்! இன்று "பென்டுலம் என்று ஆங்கிலத்தில் கூறப்படும் ஊசல் விளக்கின் தத்துவத்தினை உலகில் முதன் முதல் கண்டுபிடித்த விஞ்ஞானி இவரே ஆவார்.

அத்துடன் விட்டு விடவில்லை அந்த ஊசல் விளக்கின் தத்துவத்தை தொடர்ந்து ஆராய்ந்து கொண்டே இருந்தார்.

ஊசலின் அலைவு நேரத்தை அவர் கணக்கிட்ட்தைப் போலவே அதற்கு இவரது நாடித்துடிப்புகள் பயன்பட்டதைப் போலவே, மற்றும் ஓர் அதன் தொடர்பான ஆராய்ச்சியிலே அவர் ஈடுபட்டார். அந்த ஆராய்ச்சி என்ன தெரியுமா?

தனது நாடித் துடிப்பைக் கொண்டு அல்லவா ஊசல் விளக்கின் கால அளவை ஆராய்ந்தார்! இப்போது, எந்த தாடித்துடிப்பால் ஊசல் காலத்தை ஆராய்ந்தாரோ, அந்த நாடித்துடிப்பையே இப்போது ஆராய்ச்சி செய்ய முற்பட்டார்.