பக்கம்:கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்


அந்த ஆராய்ச்சியின் பயனாலே, நாடித்துடிப்பின் விகிதத்தைக் கணக்கிட்டுக் கூறுவதற்குரிய ஒரு கருவியினைக் கண்டு பிடிக்க விரும்பி, ஆதையும் தனது அயராத சோதனைகளால் கண்டு பிடித்தார்.

ஆந்தக் கருவி கண்டுபிடிக்கப்பட்ட விவரங்கனைக் கலீலியோ தமது பேராசிரியமோர்களிடம் தெரிவித்தபோது, அதைக் கேட்ட ஆலர்களும் மகிழ்ச்சியடைந்தது மட்டுமல்லாது, விப்பும் அடைந்தார்கள்!

நாடித்துடிப்புக்கான விகிதத்தைக் கண்டறிந்த பின்பு, அதன் தொடர் ஆராய்ச்சியாக, ஒரு நோயாளியின் இருதயத் துடிப்பையும் கண்டிறியலாம் போல இருக்கிறதே என்று சிந்தித்த கலீலியோ, அதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு ஒரு கருவியினையும் கண்டுபிடித்தார்.

அவர் இவ்வாறு கண்டுபிடித்தக் கருவியின் பெயர் தான், இன்றைய டாக்டர்கள் தங்களது அன்றாட வாழ்க்கையில் நோயாளிகளின் இருதயத் துடிப்புகளைக் கண்டறியும் 'ஸ்டெத்தஸ் கோப்' என்ற கருவியாகும்.

ஒவ்வொரு டாக்டர்களும் இன்று அதனை அவரவர்கள் கழுத்தில் மாட்டிக் கொண்டு, இதயத்துடிப்புகளை உணர்ந்த பின்பு அதை டாக்டர் என்ற அடையாளத்திற்காகவும் பயன்படுத்திக் கொள்வதை நாம் பார்க்கின்றோம்.

மாமனிதர் கலீலியோ கண்டு பிடித்துக் கூறிய பெண்டுலம் தத்துவம் விதி, இன்று எண்ணற்ற வகையில் மக்களுக்குப் பயன்பட்டு வருவதை நாம் பார்க்கின்றோம்! இதல்லவா செயற்கரிய சாதனை!

கலீலியோவின் தந்தையாருக்கு மகன் மருத்துவத்துறையிலே ஈடுபட்டு உலகம் போற்றும் மருத்துவ மேதையாக

க பா-2