பக்கம்:கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

கலீலியோவின்

வேண்டும் என்ற ஆசை! அதனால், அவர் ஒரு டாக்டர் படிக்க வேண்டிய கல்வி எதுவோ அதிலே அவரைச்சேர்ந்து பட்டம் பெற்றிட வேண்டியதற்கான எல்லா ஏற்பாடுகனையும் அவர் செய்தார்.

வாலிபரான கலீலியோவுக்கு உள்ள ஆசை அதுவன்று, வடிவக் கணிதத்தை வரைவதிலேயே தனது முழு தேரத்தையும் செலவழித்து, அந்தத் துறையிலே அவர் ஈடுபட்டுவந்தார்.

ஆனால், அவரது தந்தையார் மகனின் கணிதக் கல்வி படிப்புக்கு இடையூறாக இருந்தார். அதனால் தனது மகனுக்கு யார் கணித ஆசிரியர் என்பதை அவர் விசாரித்தபோது, அந்த ஆசிரியர் தனக்கு மிக நெருங்கிய நண்பர் என்பதை அறிந்தார்.

உடனே தனது நண்பரில் ஒருவர் அங்குப் பேராசிரியராகப் பணியாற்றுவதால், அந்தப் பைசா பல்கலைக் கழகத்துக்குச் சென்றார். பேராசிரியர் ஆஃச் டில்வியோ ரிக்கி என்ற தனது நண்பரைக் கண்டு, கலீலியோ கற்கும் கணிதக் கல்வியிலே இருத்து அவரை மருத்துவப் படிப்பு படிக்குமாறு தூண்டும்படியும், மருத்துவத்துறைக்கு அவரை மாற்றவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஆனால், கலீலியோவுக்கு கடுகளவும் மருத்துவத்துறை பிடிக்கவில்லை; அதே வேளையில் தமது தந்தையின் ஆசையையும் தம்மால் புறக்கணிக்க முடியாதபடித் தத்தளித்தார்!

தந்தையாருக்குத் தெரியாமல் தான் கற்கும் மருத்துவ நூல்களுக்கு அடியில் கணித நூற்களையும் மறைவாக வைத்துக் கொண்டு படித்து வந்தார்; ஆராய்ச்சியும் செய்துவந்தார்.

இந்த போக்கைப் புரிந்து கொண்ட கலீலியோவின், தந்தை, மகனின் மனநிலைக்கு மாறாக நடக்க மனம்