பக்கம்:கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

23

வராததால், மகன் போக்குக்கே அவரது கல்வி விருப்பத்தை அவர் விட்டு விட்டார்.

இந்த நேரத்தில் கிரேக்கக் கணித மேதையாக கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த தத்துவ விஞ்ஞானி ஆர்க்கிமிடீஸ் கண்டு பிடித்திருந்த புனல் நிலைத்தத்துவத்தைப் பற்றி கலீலியோ ஓர் ஆய்வுக் கட்டுரை எழுதி இருந்தார்.

அந்த கட்டுரையைப் படித்துப் பார்த்த மற்றக் கணித வல்லுநர்கள். அவருக்கு அத்துறையில் இருந்த புலமையைக் கண்டு ஆச்சரியப்பட்டு, அவருக்குள்ள கணித ஆர்வத்தையும், அறிவு நுட்பத்தையும் பாராட்டி வெகுவாகப் புகழ்ந்தார்கள்.

இதன் விளைவாக அவர், 1889-ம் ஆண்டில், எந்தப் பல்கலைக் கழகத்தில் அவர் கணித மாணவனாக இருந்து இவ்வளவு திறனாளராக ஆனாரோ, அதே பல்கலைக் கழகத்தில் கணிதப் பேராசிரியரானார். அப்போது அவருக்கு வயது இருபத்தைந்தே. இவ்வளவு சிறிய வயதில் அவர் கணிதத்துறைப் பேராசிரியர் ஆனது இந்தப் பல்கலைக்கழகத்திற்கே ஒரு பெருமையாக அமைந்தது.

6. கை நாடித் துடிப்பால் பெண்டுல நேரத்தை கணக்கிட்டார்

அந்தக் காலத்தில் கிரேக்கத் தத்துவஞானியான அரிஸ்டாட்டிலின் கணிதப் புலமை பலரை ஆட்கொண்டிருந்தது. ஒவ்வொரு நாட்டிலும் பெரும் கல்வியாளர் எனப்படுவோர் எல்லாரும் இவருக்கு மாணவர்களாக இருந்தார்கள்! எங்கு பார்த்தாலும்-எந்த பிரச்னையானாலும் அவரது புலமைக்கே மக்களிடம் மிகப்பெரிய செல்வாக்கும், பெருமையும் நம்பிக்கையும், பக்தியும் இருந்து வந்தது... அவர் திறமையை மறுத்துப் பேசவோ, அதற்கு இழுக்குத் தேடவோ, தவறு என்று அவர் கண்டித்துரைக்கவோ