பக்கம்:கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
26
கலீலியோவின்
 


அரிஸ்டாடிலை எதிர்த்து அவருக்குப் பிறகு இப்படிக் கண்டனக் குரல் எழுப்பியவர்கள், அவரது ஆய்வு முடிவில் முரண் செய்தவர்கள் சிலரில், கலீலியோவைத் தவிர வேறு யாரும் இப்படி மோதல் களத்தை உருவாக்கியதில்லை என்றே கூறலாம்!

அரிஸ்டாட்டிலை எதிர்த்தது சரி; எப்படி அவர் எதிர்த்தார்? ஏன் எதிர்த்தார்? காரணம் என்ன?என்பதைக் கூறிவிட்டல்லவா அவர் தனது இரும்பு வாதத்தை வைக்க வேண்டும்; இதோ கலீலியோவே பேசுகிறார் பாருங்கள்.

"ஓர் இடத்தில் இருந்து மிகக் கனமான ஒரு பொருளையும், மற்றொரு கனம் மிகக் குறைந்த பொருளையும் ஒரே நேரத்தில் தரையில் விழச் செய்தால் அல்லது வீழ்ந்தால், அவை உறுதியாக ஒரே நேரத்தில் தான் தரையில் வந்து விழுமென்றார்" கலிலியோ!

"ஒருவேளை இடையிலே ஏற்படும் காற்றின் அலைவைத் தடுப்பால் பொருள்கள் கீழே விழுவதில் அற்ப நேரம் வித்தியாசம் ஏற்படலாம்; அதனால், இருபொருள்களும் கீழே விழும் ஒரே சமய நேரத்தில் பாதிப்பும் ஒன்றும் நேரிட்டு விடாது" என்றும், கலீலியோ சற்று அழுத்தம் திருத்தமாக அடித்துக் கூறினார்.

இந்த பலமான எதிர்ப்பைக் கேட்ட அன்றைய அறிவியல் உலகம், மாமேதை அரிஸ்டாட்டில் கருத்துக்கு எதிர்ப்பா? மறுப்பா? கண்டனக்குரலா? எவனவன் பேதைமைப் பிடித்தப் பித்தன்? என்று ஏசிய சிலர் கண்மூடித்தனமாக, பழக்கமாகிவிட்ட ஒரு மூட நம்பிகையின் வழக்கம்போலப் பேசி எள்ளி நகையாடினர் கலீலியோ என்ற மகத்தான ஒரு தத்துவ ஞானியை!

ஓர் ஆராய்ச்சியில் கருத்து முரண் இருந்தால் அதை வரவேற்பவன் அறிஞன் எதிர்த்து எள்ளி நகையாடுபவன் அறிவின் வறிஞன்! என்று எண்ணிய கலீலியோ என்ற