பக்கம்:கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்
33
 


இந்த குறுகிய அளவுக்குள்- குறிப்பிட்ட அளவு ஒளியே நுழையக் கூடும். ஓர் அங்குல குறுக்களவுள்ள தொலை நோக்கி; வெற்றுக் கண்களைவிட இருபத்தைந்து மடங்கு அதிக ஒளியைப் பெறும்!

அதனால், வெற்றுக் கண்களால் பார்க்கக் கூடிய மிக மங்கலான நட்சத்திரத்தைவிட, இருபத்தைந்தில் ஒரு பங்கு மங்கிய ஒளியினையுடைய நட்சத்திரத்தையும் இந்தக் கருவியின் மூலம் நன்றாகப் பார்க்க முடியும்.

அதனைப்போலவே, ஓர் அங்குலக் கண்ணாடியின் மூலமாக வானத்தின் இரண்டு லட்சத்து இருபதனாயிரம் நட்சத்திரங்களை நாம் காணலாம்.

9 தொலை நோக்கி மூலமாக சந்திரனை ஆராய்ந்தார்!

ஆனால், வானவெளியில் ஏறத்தாழ கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் உலவுவதாக வான நூல் வல்லார் வரையறுத்துக் கூறுகிறார்கள்.

கலீலியோவால்; முதல் முதல் அவரால் செய்யப்பட்ட பார்க்கும் குழாயால், அவர் அதற்கு முன்பு தான் வெற்றுக்கண்களால் பார்க்க இயலாத எண்ணற்ற நட்சத்திரங்களைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார்.

கிருத்திகை நட்சத்திரம் PLEIADES ஆறு விண் மீன்களை மட்டுமே கொண்டது என்று மக்கள் அதுவரை நம்பினார்கள். ஆனால், இப்போது அதே கிருத்திகையில் முப்பத்தாறு நட்சத்திரங்களை கலீலியோ பார்த்துப் பரவசப்பட்டார்.

கிருத்திகை விண்மீன் என்பது மிகச்சிறிய நட்சத்திரங்களின் கூட்டம்! வானத்தில் அது ஒரு கோடியே எண்பது