பக்கம்:கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
34
கலீலியோவின்
 

லட்சம் மைல் தொலை தூரத்தைக்கொண்டுள்ளது. இந்தக் கூட்டம் முழுவதிலும் மெல்லிய மேகப் படலம் பரவியுள்ளது.

சாதாரண வெறும் கண்களுக்கு ஆறு கிருத்திகை நட்சத்திரங்களே தெரியும். உற்று நோக்கும் கூரிய பார்வையுடைய ஒரு சிலருக்கு மட்டுமே பதினான்கு மீன்கள் வரையிலும் காணமுடியும்.

ஆனால், தொலை நோக்கியின் உதவியினால், மிகக் குறைந்தது மூவாயிரம் நட்சத்திரங்களையாவது நம்மால் பார்க்க முடியும். இதனைக் கூட வான வெளியில் ஆகஸ்டு மாதம் முதல் மார்ச்சு மாதம் வரையில் தான் நாம் பார்த்து மகிழலாம்.

இந்த கிருத்திகைக்கு நமது நாட்டில் ஒருகதை உண்டு. வெற்றுக் கண்களுக்குத் தோன்றும் ஆறு கிருத்திகை விண்மீன்கள், முருகப் பெருமானைக் குழந்தைப் பருவத்தில் பாலூட்டி வளர்த்த ஆறு பெண்கள் என்றும், அவர்களைக் கார்த்திகைப் பெண்கள் என்றும் கூறுவார்கள் என்பதே அந்தப் புராணக் கதை!

வான்வெளியில் ஒரு நீண்ட போக்கில் பேரொளியாகக் காணப்படும் பால்வெளித் தோற்றம் Milky Way இருக்கிறதே, அது எண்ணற்ற நட்சத்திரங்களின் ஒன்று சேர்ந்த கூட்டம் என்று கண்டும் அவர் ஆனந்தக் கூத்தாடினார்.

கலீலியோ தம்முடைய தொலை நோக்கியைக் கொண்டு சந்திரனையும் கண்டார், ஆதே நிலாவை அதனின் மூன்றில் ஒரு பங்கை அருகிலேயே பார்த்து ஆச்சரியப்பட்டார்.

ஆகாயப் பெருங்கடலையும் கடந்து ஏதோ ஆங்காங்குள்ள நாடுகளைக் கண்டு வெற்றி பெற்றதைப் போல அவர் வீர உணர்வு பெற்றார்.