பக்கம்:கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
40
கலீலியோவின்
 


ஆனால், இவற்றை எல்லாம் கேட்ட ஐரோப்பா கண்டத்து அறிவியல் அறிஞர்கள் எல்லாம் போட்டி போட்டுக் கொண்டு, கலீலியோவின் தொலை நோக்கிகளைத் தோளில் சுமந்து கொண்டு, கண்ட கண்ட இடங்களிலே இருந்தெல்லாம், சந்திரனையும், வியாழனையும் ஆராய்ந்து ஆராய்ந்து அவரவர் உண்மைகளைக் கண்டு அறிவு மெய் மறந்தார்கள்.

வானத்திலே நடக்கும் இந்த வியத்தகு கோளியல் விளையாட்டுக்களைக் கேட்டு வியந்த அறிவியல் மாணவர்கள், அறிஞர்கள் அனைவரும்-கலீலியோவிடம் அவை பற்றிய பயிற்சிகளைப் பெற பிறநாடுகளிலே இருந்து வந்து பயிற்சி பெற்ற வண்ணம் இருந்தார்கள்.

கலீலியோ 610-ஆம் ஆண்டில் வியாழன் கிரகத்திலே உள்ள நான்கு நிலாக்களை ஆராய்ச்சி செய்து கூறிய பிறகு, அவரது பாதையிலே சென்ற கலீலியோ கொள்கையாளர்களில் ஒரு சிலர், 1892-ம் ஆண்டில், அதாவது மறைவுக்கு 282-ஆண்டுகளுக்குப் பின்பு, அவர்கள் கூடி ஒரு கருத்தை ஆய்ந்து வெளியிட்டார்கள்.

அந்த ஆய்வின் முடிவு என்ன வென்றால், 1892-ஆம் ஆண்டில் மவுண்ட் ஆமில்டன் என்ற இடத்தில் இருந்து பேராசிரியர் "பர்னார்ட்" என்பவர் ஐந்தாவது சந்திரனை வியாழன் கிரகத்திலே இருப்பதாகக் கண்டுபிடித்தார்" அந்த செய்தியை அவர் உலகுக்கு கூறினார்.

"அதற்குப் பிறகு, சில ஆண்டுகளில், அதே இடத்தில் இருந்து புகைப்படக் கருவிகளால் மேலும் இரண்டு நிலாக்கள் இருப்பதாகச் சில ஆய்வானர்கள் கண்டுபித்துக் கூறினார்கள்."

"1908-ஆம் ஆண்டின்போது, 'கிரீன்விச்' என்ற இடத்தில் இருந்து சில வான்வெளி ஆராய்ச்சியாளர்கள்