பக்கம்:கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்
43
 

செல்வதைக் கலீலியோ கண்டார். அதைத்தான் சூரியனின் முகத்தில் கரும்புள்ளிகள் நகர்கின்றன என்று அறிவித்தார்.

கலீலியோ செய்த அந்த சலியாத ஆராய்ச்சியால், சூரியக் கரும்புள்ளிகளின் நிலைகனைக் கண்டு; பூமியைப் போல சூரியனும் தனக்குத் தானே ஏறத்தாழ இருபத்து எட்டு நாட்களுக்கு ஒருமுறை சுற்றிக் கொண்டிருக்கிறது என்று அவர் உலகறிய உரைத்தார்.

அரிய இத்தகைய அதிசய உண்மைகளை உலகத்திற்குக் கூறிய கலீலியோவை அறிவுள்ள மக்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் அணியினர், வருங்காலத் தலைமுறையில் பொறுப்புள்ள சமுதாயத் தலைவர்கள் அனைவரும்; அவரை வியந்து பாராட்டி மகிழ்ந்துப் போற்றினார்கள்.

அதுவரை உலகம் கண்டிராத ஒரு அறிவியல் மேதை, வானியல் வித்தகர், என்று எல்லா மக்களும் குண பேதமின்றிப் அவரைப் போற்றி வாழ்த்தினார்கள்.

ஆனால், அறிவற்ற மக்கள் மூட நம்பிக்கையிலே மூழ்கிக் கிடப்பவர்கள் பழமைக் கொள்கைகளைக் கைவிட மனமில்லாத புதுமை விரோதிகள், மதவாதிகள் அனைவரும்; அவரவர் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ள முடியாமல் விடாப் பிடியாகவே இருந்தார்கள்.

அவர்கள் அத்துணைவரும் கலீலியோ மீது வெறுப்பு வேல்களை வீசி வந்தார்கள். அவர்வானப் புதுமைகளை உலகுக்கு எடுத்துச் சொல்லச் சொல்ல, அவருடைய எண்ணத்தின் பகைவர்கள் மனம் போனவாறு ஏசினார்கள், பேசினார்கள், எரிச்சலால் ஏராளமான தொல்லைகளை, துன்பங்களை உண்டு பண்ணி வந்தார்கள்.

பாதுவா பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிய ஒருவர், கலீலியோ கண்டு பிடித்த