பக்கம்:கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்
47
 

மார்களை அழைத்து வந்து ஆர அமர பொறுப்போடு விளக்கி விளக்கித் தொலைநோக்கி மூலம் காணச் செய்தார்!

அந்த பாதிரிமார்கள் கலீலியோவை முகத்துக்கு முகமாகப் பார்த்து, "கடவுள் கொடுத்த கண்களுக்குத் தெரியாத ஒன்று, ஏதோ ஒரு ஜாலக்கண்ணாடி மூலம் புலனாகிறது என்றால்; அது உண்மையானது ஆகுமா? என்று கருணை பொங்கும் மனத்தோடு குருமார்கள் வெண்டைக்காய் சமாதானம் பேசினார்கள்!

பாதிரிமார்களது பதிலே இப்படி என்றால் மற்றவர்களைப் பற்றி என்ன நினைப்பது என்று மனம் வெதும்பினார் கலீலியோ!

அவர்களை விட்டு விட்டு செல்வச் சீமான்கள் எனப்படும் பிரபுக்களை, பணக்காரர்களை அழைத்து வந்து அவர் தனது தொலை நோக்கிகளை அவர்களிடம் கொடுத்து "நோக்குங்கள்" என்றார்!

பார்த்த நேரம் வரை பலதடவைப் பார்த்து விட்டு, என்ன சொல்வது என்றே அரியாமல் குழம்பிப் போய், “கலீலியோ ஒரு மாயாவி! செப்படி வித்தைக் காரன் என்று மட்டும் கூறியவாறே வந்த வழியே சாரட்டுகள் மீது ஏறிச் சவாரி செய்து சென்றார்கள்.

சாரட்டுகள் பின்னாலே ஓடிப்போயா உங்களுடைய அபிப்பிராயம் என்ன என்று கேட்பார் கலீலியோ? அப்படி அவர்கள் ஓடியதைக் கண்டு ஓணான் தலையாட்டுவதைப் போல ஆட்டிக்கொண்டே, அடுத்துள்ள கல்வியாளர்கள் சிலரை அழைத்து வந்து; டெலஸ் கோப் கருவிகளை அவர்களிடம் கொடுத்துப் 'பாருங்கள்; பிறகு கூறுங்கள் உங்களது எண்ணங்களை' என்று அக் கருவிகளை அவர்களிடம் கொடுத்தார்.