பக்கம்:கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

கலீலியோவின்


இவ்வளவுக்கும் இடையே மதவாதிகள் மட்டுமே கலீலியோ கருத்தை அவமதித்தார்கள். அரிஸ்டாட்டில் கருத்துக்களை மறுப்பவன், எதிர்ப்பவன், துரோகி விரோதி என்றெல்லாம் கலீலியோ மீது குற்றம் சாட்டினார்கள்.

அதனால் கிறித்துவப் பாதிரியார்கள் எல்லாருமே கலீலியோவை எதிர்த்தார்கள். அவரை பைபிள் விரோதி, இயேசு பெருமானுக்கு எதிரி என்ற அவதூறுப் பிரச்சாரம் செய்து வந்தார்.

கிறித்துவப் பெருமக்களுடைய எதிர்ப்பை கலீலியோ மீது ஏவிவிட்டார்கள். பாரதியார்களும்-கிறித்துவர்களும்! இதற்குப் பாவமன்னிப்பும் கூட கிடையாது என்று ஆணவமாக ஆடினார்கள்!

மதவாதிகள், இம்மைக்கும் மறுமைக்கும் நல்வழி காட்டிடும் மார்க்கவாதிகள். அவர்கள் கிறித்துவர்கள் ஜெபக் கூட்டம் நடைபெறும் தேவாலயங்களிலே எல்லாம் கலீலியோவைப் பற்றிக் குறை கூறிப் பேசி வந்தார்கள்.

14. கலீலியோ பைபிள் விரோதி! போப்பாண்டவர் தீர்ப்பு!

கிறித்துவ சமைய நூலான பைபிள் நூலுக்கு கலீலியோ நேர் விரோதி என்று பேச ஆரம்பித்தார்கள். கருணைக்கடல் இயேசு நாதரை விட, கலீலியோ நான் தான் அறிவாளி என்று பேசுகிறார்! என்றார்கள்.

ஆண்டவர் இயேசு நாதரை விடவா இவர் அதிகமாக எதையும் அறிந்தவர்! அகந்தையால் கலீலியோ பேககிறானே! அவர் அப்படிப் பேசுவது என்றால் பாதிரிகளாகிய நாங்கள் ஏன்? மெழுகுவர்த்திகளை ஏற்ற மட்டும்தானா?

இயேசு ஊழியம் புரிவதற்காகவே பிறந்த எங்களைவிடவா இந்த கலீலியே உலக இயக்க வரலாற்றை