பக்கம்:கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/55

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்
53
 

கலீலியோ குற்றவாளிதான் என்று முடிவு செய்தார்கள். ஆனால், கலீலியோவுக்கு ஒரு நிபந்தனையைப் போப்பாண்டவர் விதித்தார்.

அந்த நிபந்தனை என்ன தெரியுமா? இதோ "கலீலியோ எக்காரணத்தைக் கொண்டும் தான் கண்டுபிடித்தக் கொள்கைகளை மக்களிடமோ, மற்ற யாரிடமோ எடுத்துக் கூறக்கூடாது.

அவர் கொண்டுள்ளக் கருத்துக்களைக், கொள்கைகளைத் தமது உள்ளத்தினின்றும் உடனே அகற்றி விட வேண்டும்! அவ்வாறு செய்ய விட்டால் கலீலியோ கண்டிப்பாகத்தண்டிக்கப்படுவார்" என்று போப்பாண்டவர் அவருக்கு நிபந்தனையும், எச்சரிக்கையும் விதித்தார்.

போப் ஆண்டவரின் இந்தத் தீர்ப்பு: வருங்கால மக்களின் வளமான ஆறிவியல் வாழ்வுக்கு ஒரு பெரும் தடை போடப்பட்டதாக, கலீலியோ உணர்ந்தார்! மனம் தளர்ந்தார்!

ஒரு போப், வானியல், அறிவியல் உணர்வுகளே இல்லாதிருப்பதனால் வரும் கேடுபாடு இது என்பதை உணர்ந்தார்! கலீலியோ வேதனைப்பட்டார்!

போப் ஆண்டவர் என்பவர், வானியல் அதிசயங்களை உணராதவராக உள்ளாரே என்று அவர் வருத்தப்பட்டார்! இதயம் நொந்தார்!

"இந்த ஆணையின் அநீதியால், விஞ்ஞான உலகம் தனது புதுமை பூக்கும் மணத்தை இழந்து வாடிய மலராகி விடுமே என்று கண்ணீர் சிந்தினார்!

இனிமேல் வரும் போப்புகள் மார்கத் தத்துவங்களை மட்டுமே படித்தால் போதும் என்றால், அவர்கள்தான்

கா.மா-4