பக்கம்:கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

கலீலியோவின்


கலீலியோவால் எழுதப்பட்ட நூலில் உள்ள வானியல், அறிவியல் கண்டுபிடிப்புக் கருத்துக்களை எவரும் மறுக்க முடியாதபடி, பற்பல ஆதாரச்சான்றுகளுடன் விளக்கிக் காட்டி, எளிய நடையில் மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் எழுதியிருந்தார்.

தனது எண்ணங்களைப் புத்தகமாக வெளியிட்டு விட்ட கலீலியோவின் துணிச்சலையும், தைரியத்தையும் கண்டு போப் அணியினர் ஒன்று சேர்ந்துக் கூச்சலிட்டு ஓர் எதிர்ப்பு அறிக்கையை வெளியிட்டார்கள்.

வாயால் பேசக்கூடாது என்ற கலீலியோ கருத்துக்கள், எண்ணங்கள் எல்லாம் இப்போது புத்தக உருவிலே நாட்டில் நடமாடின! அதைக் கண்ட போப் திருச்சபையினர், கலீலியோவை எங்கிருந்தாலும் துரத்திப்பிடி! வேகமாகச் செயல்பட்டு கைது செய் என்ற பழைய போப் ஆணைமீது மறுபடியும் ஒரு புது கட்டளையை பிறப்பித்தார்கள்!

சிறைபட்ட அன்றே கலீலியோவை ரோமாபுரியின் சிறைக்குக் கொண்டு போய் விட்டார்கள். அங்கு மூன்று நாட்கள் அவரைத் தங்க வைத்து, கலீலியோ மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகள் மீது போப்பின், திருச்சபையினரும் விசாரணை நடத்தினார்கள்.

அந்த விசாரணையில், அவர் எழுதி வெளியிட்ட அவரது புத்தகத்திலுள்ள கருத்துக்களில் ஒன்றான, "பூமியைச் சூரியன் சுற்றுவதில்லை என்பதை அவர் தெள்ளத் தெளிவாகத் தெரிவித்திருந்தார்."

'அந்தக் கருத்து பைபிள் வேதாகமத்திற்கு நேர் விரோதமானது' என்ற குற்றச்சாட்டை போப்பாண்டவர் சாட்டினார். அதற்குக் கலீலியோ பதில் கூறும்போது தனது கண்டு பிடிப்பின் உண்மைகள் ஒவ்வொன்றையும்